பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. காவிரி

முதனிலையுரிச்சொற்கள் முற்றுப்பொருளவாதல் யாண் டும் இன்மை யானும், சேரா என்ற ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம், ஈறுபுணர்த்து கெட்டது போன்றே அதனால் விசேடிக்கப்பட்ட இறைவனும் இருவினைகளை யும் ஒருகாலத்துப் புணர்ந்து நின்று, இதுபோது அவற். றின் தீங்கியுள்ளான் என்று பொருள்பட்டு, இறைவன்தன் இயல்பாகவே பாசங்களின் நீங்கற்றன்மைக்கு இழுக் குண்டாம் ஆதலானும் அவர் உரை பொருந்துமாறு இல்லையென்க.

6. "பொறிவாயி லைந்தவித்தான்் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்'

இக் குறளிற்கு இருவர் கூறும் உரையும் ஒன்றே. மணக்குடவர் நீடுவாழ்வார் என்பதை எழுவாயாகவும், நெறிநின்றார்என்பதைப்பயனிலையாகவும் கொண்டார். அழகியார், அவ்வாறின்றி மாற்றிப் பொருள் கொண் டார். நீடுவாழ்வார் என்பதற்குப் 'பிறப்பின்றி எக்காலத் தும் ஒரு தன்மையராய் வாழ்வார்” என்றார் அழகியார். 'இன்பமுண்டேல்,துன்பமுண்டாம் ஆதலின்’ அவ்விரண்டும் இல்லையென்பார் ஒரு தன்மையராய் வாழ்வார் என்றார். பிறப்பின்றி. எனவே, பிணி, மூப்பு, இறப்புக்களும் இல்லையென்பது பெறப்பட்டது. படவே. "எக்காலத்தும்” என்றல் வேண்டா கூறலாம் என்க். இனி, "தோற்றமுண்டேல் மரணமுண்டாம்” எனவே தோற்றமின்றேல் மரணமின்றாம்என்பது பெறப்பட்டது. இதையுட் கொண்டே மனக்குடவர், "இது சாவில்லை யென்றது”என்றனர்.நீடுவாழ்வார் என்பதற்கு'அழிவின்றி வாழ்வார்” என அழகியார் பொருள் கூறியது.உம் காண்க. (குறள் 3) . . . . . - -