பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 41

நெறிகின்றார் நீடுவாழ்தலாமாறு

இறைவன் ஐந்தவித்தான்் எனவே, அவா வற்றவனா தில் பெறப்பட்டது. அவாவற்ற இறைவனைச் சார்ந்த வரும் அவாவற்றவரேயாவர். (அஃதாமாறு அடுத்த குறளின்கண் விளக்குவாம்) செல்வம் என்பது 'சிந்தை யின் நிறைவே; அல்கா நல்குரவு அவாவெனப்படுமே” என்பர் ஆதவின், அவாவற்றார், நிறைந்த சிந்தையினரா தலும், செல்வமுற்றாராதலும் பெறப்பட்டன. அத்தகை யார்க்குக் கவலையின்றாம். (அ.தறுதலைக்கூறும் 'தனக்குவமையில்லான்' என்ற குறளை இதன்பின் வைத்ததும் ஈண்டு நோக்கற்பாலது) கவலையுற்றவர் உடல், அக்கவலையானே, நலங்குன்றிக்கெடுதல் கண்கூடு. இக்காலத்தும், உடல் நலம் குன்றியிருப்பாரைக்காணின், 'பாவம் கவலையதிகமாயிற்று' என்றும், உடல் நலம் நன்கு வாய்க்கப் பெற்றாரைக் காணின் "கவலையற்ற சீவன்' என்றும், மக்கள் கூறுவதும் அறிதற்பாலது. ஆத லின், கவலையற்றவர், உடல்நலங்குன்றாது வாழ்வார் என்பது பெறப்பட்டது உம் காண்க)

7 'தனக்குவமை யில்லாதான்் தாள் சேர்ந்தார்க்

கல்லான் 'மனக்கவலை மாற்ற லரிது.” -

இக்குறளிற்கு இருவர் உரைக்கும் உரைகளும் ஒன்றே எனினும், விசேடவுரையில் அழகியார், "தாள் சேராதார் பிறவிக்கேதுவாகிய, காம,வெகுளி, மயக்கங்களை மாற்ற மாட்டாமையின் பிறந்து அவற்றான் வருந்துன்பங்களுள் அழுந்துவரென்பதாம்" என்றனர் மணக்குடவர், 'வீடு பெறலாவது அவலக்கவலைக் கையாற்றினிங்கி, புண்ணிய பாவமென்னும் இரண்டினையும் சாராமற்சாதலும்பிறத்