பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 sirsstifi

என்றும், தலையினையுடைய உடம்புகள் என்றும், ஆகு பெயராகக் கொண்டு பொருள் கூறியுள்ளார்.

ஒரு சொல் இயற்பெயராகவே நின்று பொருளை விளக்குவதாக,அதனை ஆகுபெயராகக் கொண்டு பொருள் கூறல் குற்றமாம் எனின்? அறியாது கூறினாய்; என்னை? ஒருசொல் இயற்பெயராகவே நின்று பொருளை விளக்கு வதாகவும், அதனை, ஆகுபெயராகக் கொண்டு போருள் கூறல், கேட்பார் பொருளை எளிதில் உணர்தற்கன்றே?

ஈண்டும், தன் தொழிலைச் செய்யமாட்டாத உறுப் புகள் போல பயனுடைய வல்ல என்று கூறுவதினும்,பாவை யின் உறுப்புகள் போல பயன்படுதல் உடையவல்ல என்றல், பொருளை எளிதில் விளக்குதலின், மணக்குடவர் அவற்றை ஆகுபெயராகக் கொண்டு பொருள் கூறியது குற்றமாதல் யாண்டைய தென்க.

10 பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீந்தார்

இறைவனடி சேராதவர்”

. இது மணக்குடவர் கொண்ட பாடம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்

இது அழகியார் கொண்ட பாடம்; இரண்டிடத்தும் தளை கெடுதல் இன்மையின் இரண்டும் பொருந்துவனவேயாம்.

இக்குறளிற்கு இருவர் கூறும் உரையும் ஒன்றே.

-தமிழ்ப் பொழில் 1937-38 பக்கம்:25:1938-39 . . பக்கம் : 59