பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 . காவிரி

என்பதும், அரும்பத உரையாசிரியர்க்கும் அதுவே கருத்து என்பதும் இவர் உட்கோளாதல் பெற்றாம்.

அடிகள், அரசு துறந்திருந்த குணவாயிற் கோட்டம், திருக்குனவாசல் எனப் பெயர் பெற்று, வஞ்சி நகரின் கீழ்த்திசைக்கண் ணுள்ளதொரு ஊரில் உள்ள அருகன் கோயிலாம் ஆதலானும், இலவந்திகைச் சோலையென் பது வஞ்சிநகர்க்கு அண்மையில் உள்ளதும், அரசனும், உரிமையும் ஆடுவதுமாய காவற்சோலையாம் ஆதலா னும், அரசு துறந்து, குணவாயில் கோட்டத்து இருப்பவர் அரசனும்,உரிமையும்ஆடும், காவற்சோலையில் அவருடன் இருந்தார் என்றல் நிரம்பாதாகலானும், மனைவியுடன் மலைவளம் காணச் செல்லும் தன் உடன் பிறந்தான்ுடன் அரசமுனியாகிய அடிகள் சென்றார் என்றல் அடிகட்கே இழுக்குடையத்தாம் ஆதலானும்,மணல் எக்கரில் மூவரும் இயைந்து ஒருங்கிருந்தனர் என்றல், இளங்கோ வேண் மாள் தனக்கும் இழிவுடைத்தாம் ஆதலானும், கையுறை முதலியன கொணர்ந்த வேடுவர், முதன் முதலில் அரச முனியை வணங்கிய பின்னரே அரசனை வணங்குதல் நியதியாக, அங்ங்ணமின்றி, அரசனை வணங்கினர் என்றல் நியதியன்றாமாதலாலும், கோப்பெருந்தேவி, கண்ணகி யென்ற இருவருள் சிறந்தார் யார் என்ற ஐயத்தை, அஃகியகன்ற அறிவுடைய அரசமுனி தன்னுடன் இருப்ப வும், அவரிடம் கேட்டுத் தெரியாது தன் மனைவியிடம் கேட்டல் அழகன்றா மாதலானும், அவ்வடிக்கு அவ்வாறு பிரித்துப்பொருள்கூறல் பொருளாகாது என்க. மற்று அவ் வடிக்குப் பொருள் என்னை எனின்; கூறுதும், இளங்கோ வேண்மாள் என்ற தன் மனைவியுடன் இருந்து என்பதே பொருள் என்க. இருக்குவேள், இருங்கோவேள், இளங் கோவேள், நன்னன்.வேள், உதியன் வேள் என வேளிர்கள் பலருள்ளும், இவள், இளங்கோவேள் குலத் துதித்தாள் என்றற்கு இளங்கோவேண்மாள் என்றார் என்க.)