பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கோல்

- வடக்கண் வேங்கடத்தையும், தெற்கண் குமரியாற் றையும் எல்லையாகவுடைய, தமிழ் கூறும் நல்லுலகத் தைப், பல்லாண்டுகளுக்கு முன்னர், பல அரசர் பெரு மக்கள் செவ்வனே ஆண்டு வந்தார்கள். அவர்கள், மலர் தலை யுலகிற்கு உயிரெனச் சிறந்தவன் அரசனே என் பதை யுணர்ந்தவர்களாதலின், அவர்கள் செங்கோலினர் களாய், இருந்து வந்தார்கள். -

உயர்குடிப்பிறப்பும், பிறந்த குடியை உயரச்செய்யும் . ஒழுக்கமும் அறம், பொருள், இன்பம், வீடென்னும் உறுதிப் பொருளுணர்த்துவனாகிய அறநூலும், நீதி நூலும், யானை, குதிரை, தேர், படைக்கலம் என்ற வற்றின் நூல்களும் ஆகிய இவற்றை, விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயின்று, அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்கும்

  • முதனாட் போரில், இராமனுக்கு முன்நிற்க ஆற்றாது, தோற்றோடிப்போத்த இராவணன், இரண் டாம் நாள், தன் தம்பி, கும்பகருனனைத் துயில் நீப்பித்து, அதுகாறும் நடந்தேறிய செய்திகளைக்கூறி அவனைப் போருக்குச் செல்லுமாறு பணித்தகாலை, "ஆனதோ வெஞ்சமர் அலகில் கற்புடை, சானகி துயர் இனும் தவிர்ந்த தில்லையோ?” "அந்தோ புலத்தியன்