பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்வர். கா. கோவிந்தன் 53.

அடுக்கிவரினும், தந்நிலையில் சிறிதும் தாழாது, அவ் வினை, தன்னால் இசையாதெனினும், ஒராற்றால் இயற்றும் வன்மையும், ஒரோவழி, தெய்வத்தான்். தாழ்வு வந்துழி, மயிர் நீப்பின் உயிர் வாழாத கவரி" மாளனப் போல, உயிர் வாழாத உயர்வும், முற்றத் துறந்த முனிவராயும், விரத வொழுகினராயும் வேடம் பூண்டு, உள்புகுதற்கரிய இடங்களிலெல்லாம் உள்புக்கு, ஆராய வேண்டுவனவற்றை ஆராய்ந்தறிந்து, ஆண்டை யார் ஐயுற்றுப் பிடித்து, சாம, பேத, தான், தண்டங்கள் செய்யினும் தன்னை வெளிப்படுத்தாத ஒற்றரைப் பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்திலார் மாட்டும் நிகழ்ந்தன, நிகழ்வன அறிதற்குப் போக்கி, அவர் வந்தறி வித்த காரியந் தன்னையும், மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றுவித்து ஒப்புமை கண்டு அதற்குத் தக நடக்கும் பேராற்றலும், போருக்குச் செல்லுவதற்கு முன்னர், "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணி யுடையீரும், பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இதுக்கும் பொன் போற் புதல்வர்ப்பெறாஅதீரும் எம் அம் புகடிவிடுதும் நும் அரண்சேர்மின்"என,பறையறைவித்துச் சென்று, 'அறத்தினாலன்றி யமார்க்கும் அருஞ்சமங் கடத்தல் மறத்தினால் அரிதென்பதை மனத்திடை வலித்து, அழியுநர் புறக்கொடை யயில்வேலோச்சாது யோர் புரியும் சீரிய குணமும், புலவர் பாடும், புகழுடை யோர், விசும்பில் வலவன் ஏவா லானவூர்தி யெய்துவ ரா.கலின், புலவரைப் புரக்கும் வண்மையும் ஆகிய இன்னோரன்ன குணங்களையுடைய அரசன், . . . . . . . .

மேற்கூறிய குணங்களையுடையவனும், குன்றக் கூறல் முதலிய குற்றங்கடிந்து, சுருங்கச் சொல்வல் முதலிய குணங்களோடு கூடிய சொற்களைக் கூறவல்ல ஆற்றலும், அரசனுக்கு ஒன்று கூறுங்கால், அப்பொழுது

ómー4