பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - காவிரி

சென்று உதவி அதனைக் களைபவனும், தான்், பழியும் பாவமும், தரும் செய்கையைச் செய்ய முயலுழி, அது செய்தற்கு முன்னரே மேற்சென்று, செவிகைக்கும் சொற். களைக் கூறியேனும் திருத்துபவனும் ஆய நண்பரையும்,

தனக்கு உறுதுணையாகக் கொண்டு, முறை வேண்டி னார்க்கும், குறை வேண்டினார்க்கும் பேரத்தான்ிக்கண், சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வியுடையனாய், யாவர் மாட் டுங் கடுஞ் சொல்லன் அல்லனுமாய், தன் கீழ் வாழ்வார் குற்றம் செய்யின், அக்குற்றத்தை நாடி, செய்தார், உயிரினும் சிறந்தாராயினும் அவர் மாட்டுங் கண்ணோடாது, நடுநிலைமையோடு, அக்குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூலோரோடுங் கூடி ஆராய்ந்து அவ்வளவிற்றாகச் செய்து ஆளும் ஆட்சி செங்கோன்மை யெனப்பெறும்,

-தமிழ்பொழில் : (1938-39). 145.149