பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 60 - காவிரி

“என்றாலும், அவர்களில் தனித் தனியாக எவ்வளவு பொருளை உண்டாக்கினார்கள் என்பதை அறிய முடியாமலே நிற்கின்றோம்.

ஒர் இயந்திரம் கணக்கற்ற ஊசிகளை நாள்தோறும் உண்டாக்குகின்றது என்றாலும், அவ்வூசிகளில் எவ்வளவு ஊசிகளை, இத்தகைய இயந்திரம் ஒன்றைச் செய்யக் கூடும் என எண்ணிய பெரியார் செய்தாராவர்? எத்தனை ஊசிகளை அவ்வியந்திரம், இவ்வாறு தான்் செய்யப்படுதல் வேண்டும் எனக் கூறினார் செய்தாராவர்? எவ்வளவு ஊசிகளை அவ்வியந்திரத்தைச் செய்தார்; செய்தாராவர்? எவ்வளவு ஊசிகளை அத்தொழிற்சாலை யில் உள்ள தொழிலாளிகள் செய்தாராவர்? என்பன போன்ற வினாக்களுக்கு விடையிறுக்க மாட்டாத நிலை யிலேயே இருக்கின்றோம்.

ஒருவன் நாற்காலியையோ அல்லது வேறு ஒரு மரச் சாமானையோ செய்கின்றான் என்றாலும், அவைகளும் கூட, அவன் ஒருவன் தன் உழைப்பினால் மட்டும் உண்டாயின என்று கூறுவதற்கில்லை. மரம் வைத்தவன், அதை வெட்டினவன், அதைத் துண்டித்தவன், அதை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசேர்க்கும் வண்டிக்காரன், படகு ஒட்டி, கப்பல்"ஒட்டி, துறைமுக வேலையாளர், அதைப் பலகையாக அறுப்பவன், அதை உருவாக்கிய இணைப்பாளன், வியாபாரி என இத்தனை பேர்களுடைய உழைப்பின் பயனாகவே, நாற்காலியோ அல்லது வேறு மரச்சாமானோ உண்டாக்கப்படுமேயா யின், அதற்காகக் கொடுக்கப்படும் பொருளை யார் யார் எவ்வளவு எவ்வளவு அடைதல் வேண்டும் என்பதை அறியமுடியுமா என்பதைக் காணமுயலின், அது முடியாத தொன்றாக இருத்தல் கண்கூடு.