பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 61

இனி, ஒருவர், ஒரு பொருளைச் செய்வதற்காக அவரால் எவ்வளவு காலம் செலவழிக்கப்படுகின்றதோ அதற்கேற்பப் பொருளைக் கூறுசெய்தல் முடியுமா என்பதைச் சற்று உற்று நோக்குவாம். ஒரு மணிநேரம் வேலை செய்தவனுக்குக் கொடுக்கும் பொருளைப்போல, இருமடங்கு பொருளை இரண்டுமணி நேரம் வேலை செய்தவனுக்குக் கொடுத்தல் எளிய முறையாகும். ஆனால் மணிக்கு ஒரு பைக்கு வேலைசெய்கின்றவர்களும், 16 பைக்கு வேலை செய்கின்றவர்களும், ஒரு வெள்ளிக்கு ...வேலைசெய்கின்றவர்களும், 20.வெள்ளிக்கு வேலைசெகி கின்றவர்களும், ஆகப் பலதிறப்பட்டவர் ք- GirrԻ * இத்தகைய மாறுபட்ட நிலையெல்லாம், அத்தகையவர் களால் செய்யப்படும் பொருள்களை எதிர்நோக்கி நிற்கும் மக்களின் எண்ணிக்கையையும் தகுதியையும் பொறுத்தா புள்ளது.

ஒரு நடிகனுக்கு ஒருவாரத்திற்குக் கொடுக்கும் பொருள், ஒரு இசைப் புலவனுடைய ஒரு மணிநேர வேலைக்குக் கொடுக்கின்றோம். காரணம் மக்கள் நாடகத்தினும்,இசையில் விருப்பமுடையராய் இருத்தலே யாகும். நல்லுருவும், நல்வழியும், நாடகவுணர்வும்பெற்ற சிறு குழந்தைகள், சில மணிநேரத்தில் பெறும் பெரும் பொருளின் சிறு பகுதியைக்கூட அவற்றின் தாயினால் அதேகால அளவிலாயினும் சரி, அதனின் மிக்க கால அளவிலாயினும் சரி பெறமுடியாமல் போகின்றது. நல் வாழ்க்கைப் பயனால், ஒருத்தி பெறும் பொருளினும், பல மடங்கு அதிகமான பொருளை அவளுடன் பிறந்தாள் அதே காலஅளவில், தீயொழுக்கத்தால் அடைகின்றாள் புகழ்பெற்ற இரணவைத்தியருக்கோ, அல்லது பாட கருக்கோ கொடுக்கப்படும் பொருளை, அவர்கள் தங்களு உன் வந்த கையாட்களும் தாங்களுமாக கூறிட்டுக் கொள்