பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I

அந்நிலையில், "என்னிடம் தமிழ் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள் எழுந்து நில்லுங்கள்" என்றார் ஒளவை. எல்லா மாணவர்களும் எழுந்து நின்றோம். ஆசிரியர், "அப்படியானால் மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் தர வேண்டும்” என்றார்; ஒரு நால்வர் தவிர்த்து ஏனையோர் அமர்ந்து கொண்டனர். -

அந்நால்வருள் அடியேனும் ஒருவன்; மாலையில் ஆசிரியர் வீட்டிற்குச் சென்றோம். ஐந்து ரூபாய் கேட்டது, மாணவர்களுக்குத் தமிழ் பயில வேண்டும் என்பதில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள, சம்பளம் எதுவும் வேண்டாம் என்று கூறித் தம்மிடம் இருந்த திரு. உலக நாதம் பிள்ளை அவர்கள் எழுதிய, வள்ளல் பாரியின் வரலாறு உரைக்கும் "கன்றும் கனி உதவும்" என்ற நூலைக் கொடுத்து, அந்நூல் முழுவதையும் மனப் பாடம் செய்து ஒப்புவிக்குமாறு பணித்தார்கள். அது தான்் நான் படித்த முதல் தமிழ் நூல்; அதிலிருந்து கார் நாற்பது, களவழி நாற்பது, திருக்குறள் எனத் தொடங்கியது என் தமிழ்ப் படிப்பு.

1934இல் பள்ளியிறுதி வகுப்பை முடித்தேன். அப் போது ஆசிரியர் ஒளவை அவர்கள் துணையால் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழவேள். உமா மகேசுவரனார் தொடர்பு ஏற்பட்டது. அவர் அறிவுரை ஏற்று, "காவிரி' என்ற தலைப்பிட்ட கட்டுரையினை எழுதி அனுப்ப, அது தமிழ்ச் சங்க வெளியீடாகிய தமிழ்ப் பொழிலில் 1935இல் வெளிவந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை; அம்மகிழ்ச்சி உந்த மேலும் சில கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தேன்.

பின்னர், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்

பதிப்புக் கழகத் தலைவர், பவளவிழாக் கொண்டாடிய பெருந்தகையாளர் திரு.வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் தமிழ் நூல்களுக்குச் சிறப்பளிக்க, 'நற்றிணை மாநாடு,' 'அகநானூற்று மாநாடு' எனப் பல மாநாடுகளை நடத்தி