பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காவிரி

பது ஆண்டுகளாக உலகிடை ஏற்பட்ட மாறுபாடுகள் மிகப் பலவாம், நீராவியினாஃ ஒட்டப்பெறும் இயந்திர வரவாலும், மின்சாரத்தினால் ஒட்டப்பெறும் இயந்திர வரவாலும், கடல் மேலும், கீழும் ஒடும் இயந்திரவர வாலும், வானிடையுலவும் இயந்திர வரவாலும், நம் மிடையே இலரே இலராகு முறையில் மிக்க பொருளை உண்டாக்கவும், தொழில் முறைகளை எளிமையுடைய தாக்கவும் கூடிய ஆற்றல் நமக்கு வாய்த்திருக்கின்றது. முற்காலத்தில் நாம் பாடு பட்ட அளவு, இன்று படுவோ மாயின் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாய தொழில் களைப், பாதிகால அளவில் முடித்துக் கொண்டு, மற்ற பாதிகால அளவை, விளையாட்டு வேடிக்கைகளுக்கும், ஆடல் பாடல்களுக்கும் செலவிடவும் கூடும்.

இம்முறை, இயந்திர வரவிற்குமுன் ஏழை மக்கள் எந் நிலையில் இருந்தார்களோ, அதைவிடப் பன்மடங்கு, கீழான நிலையில் அவர்களைக்கொண்டு வந்து விட்டு விட்டது. இம்முறை இவ்வாறே நீளவிடப்படின், இன்று ஏழைமக்கள் ஒருவெள்ளிக்கு எவ்வளவு பாதுகாப்பு. அளிக்கின்றார்களோ, அதைவிட, பன் மடங்கு பாது காப்பை ஒரு தம்பிடிக்கு அளிக்க நேரிடும். ஆனால் பொருளாளர்மட்டில், பொருளாளராகவே விளங்குவர். என்றாலும், அவர்கள், அந்தக் காலத்தில்; இருந்ததுபோல அருள் நிறையுள்ளமும், பெருந்தன்மையும் உடையராக இலராய், ஆடம்பர வாழ்க்கையும், வன்னெஞ்சமும் உடையராகவே விளங்குகின்றனர். ::

ஒருவர் கூறினார் (King Alfred) உலகநிகழ்ச்சி முறை கள், இவ்வாறே விடப்படின் வேலைசெய்யாச் சோம். பேறி ஒருவன், பெரிய வீடுகள் ஐந்து பெற்றுவாழ, அரும் பாடுபடும் மக்கள் அணியும் ஆடையும் இலராய் ஒரே அறையில் அடைபட்டு வாழும் கால்ம் கூடியவிரைவில் ஏற்படும் என்று. அதேநிலைதான்் இன்று நேர்ந்துள்ளது.