பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவித்தன் 63.

பொருள் திலையும் மக்கள் நிலையும் மாற்றம் பெறா விடின், உலகைத் தன்னிலையில் இயங்கவிடுவது நன்றுடை யதாகும். ஆனால் அது தடைபெறாததொன்றே யாகும்: நாம் செயலொழிந்து நிற்பது, நீர் தன்னிலையில் ஒடிக் கொண்டேயிருக்க, நாம் மட்டில் செயலொழிந்து அதன் கரையில் உட்கார்த்திருப்பது போன்றதாயின் நலம்: ஆனால் அது அவ்வாறின்றி, குதிரை பூட்டபெற்ற வண்டி, யில் உட்கார்ந்திருப்பது போன்றதாகiன், அதுகூடாதி காசியமேயாகும். வண்டியில் செயலொழித்திருப் டோமாயின், குதிரை தான்் முனைத்த இடமே சென்று இறுதியில் ஒருபெரும் பள்ளத்தில் தள்ளிவிடுதல் ஒருதலை யாதல்போல, உலகத்தைத் தன்னிலையில் விட்டு விடு வோமாயின் அதுவும் முறையின்றிக் கெடுதல் ஒருதலை யாம் என்க. எனவே இம்முறையும் பயனற்றது என்பது பெறப்பட்டது. - . . -

இதுகாறும், பொதுவுடைமையாளர் கூற்று ஒன்று தவிர மற்றெல்லாம் ஆராயப்பட்டன. அதன் பயனாக ஒருவரின் தகுதி, பொருளிட்டும் ஆற்றல், பெருந்தன்மை முதலியவற்றின் தகுதிக்கேற்ப, பொருளைக் கூறிடும் முறையும் பயனற்றதென்பது வெளியாயிற்று பொரு விற்கும், வேலைக்கும் சம்பந்தம் கற்பித்து, அதன் மூலம் கூறிடும் முறையும் தோல்வியுற்றது; வேலைக்கும், குணத் திற்கும் சம்பந்தம் நோக்கிக் கூறிடும் முறையும் பயனற்ற தாகிவிட்டது; பொருளிற்கும், பெருந்தன்மைக்கும் சம்பந்தம் நோக்கிக் கூறிடும் முறையும் தோல்வியுற்றது. எல்லாவற்றையும் கைவிட்டு, உலக நிகழ்ச்சிகளை அதன் திலையிலேயே விட்டுவிடும் முறையும் நடவாத தொன் றாகிவிட்டது:

இறுதியாக நோக்குழி, இறுதிவரை நின்று நிலைக்கும் முறை, ஏழைகள் துயர்நீத்து வாழும்முறை எம்முறையோ,

கா-5 - -