பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காவிரி,

வறுமையுற்ற மக்களின் சிறாரிடையே, அது காரணமாக, ஒழுக்கமற்ற செயல்களும், திருத்த மற்ற சொல்லாடலும் தோன்றுமாயின்,அவை பொருளுறு மக்களின் சிறாரிடைப் பரவாமல் இருப்பதில்லை. இளமையும், அழகும் வாய்க்கப் பெற்ற ஏழைப்பெண் ஒருத்தி, நன்னெறி வாழ்க்கையிலும், திநெறி வாழ்க்கையான் மிக்க பொருள் எய்தலாம் என எண்ணுவளாயின், அவ்வெண்ணத்தின்வழி சென்று,பொரு ளுடைய இளைஞன் ஒருவனுடைய வாழ்க்கையையும், அவன் தன் செந்நீரையும் கெடுத்து, அவன்வழி அவனு டைய இல்லக்கிழத்தி, மக்கள் ஆகியவர்களை நோய் வாய்ப் படுத்துவள். - .

இவ்வறுமையான் உற்ற பெருவிளைவுகளைக் கண்டு. அஞ்சிய பொருளுடையார், அவ்வறுமையாளரைத், தாங் கள் வாழும் இடத்தினின்றும் பிரித்து, வேறு ஒரு தனித்த இடத்தே வாழவைப்பதன் மூலம், அவர்களைப் பார்த் தலையும், அவ்வறுமையால் விளையும் விளைவுகளையும் நீக்கலாம் என எண்ணலாம்.ஆனால் அது கூடாத காரியம் என்பதே அறிவுடையார் கொள்கை நாம் பிறர்க்கென வெட்டுங் குழியில் நாம் விழவும் நேரிடும். நன்னிலையில் வாழ்ந்துவந்த பொருளுடையார் பலர், வறுமைக் குழியில் வீழ்வதை நாள்தோறும் காண்கின்றோம். அம்முறையே அடுத்து அக்குழியில் விழும் முறை நமக்கே நேரிடவும் கூடும், நேரிடாது என யாங்ங்ணம் கூறமுடியும். ஆகவே, மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவாரா யின், அவர்கள் முதன்முதலில் நாட்டிலுள்ள வறுமையைப் போக்க முயலுதல் வேண்டும் அவ்வாறின்றி, நாட்டில் வறுமை வேரூன்றி நிற்க, தாம் மட்டில் அ.துற்றாரைக் காணாமலும், அவ்வறுமையான் உளவாம் பல விளைவு. களான் பற்றப்படாமலும் வாழ முற்படுவரானால், அச் செயல் கூடாத செய்கையாகவே முடியுமென்பதுறுதி.