பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- :புலவர். கா. கோவிந்தன் 73

ஆகவே, நாட்டில் உள்ள பொருளுட்ையார் ஒவ் வொருவரும் தம்மைச் சுற்றியுள்ள வறுமையைப் போக்கு தற் பொருட்டுத் தம்முடைய பொருளின் மிக்க பகுதியை ஒதுக்குதலைத், தம்முடைய முதற்பெருங் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். தம்முடைய நாட்டில் யாரும் வறுமை காரணமாகப் பற்றுக்கோடிலராகவோ, இறக் கவோ கூடாது என்ற ஒருமுறை இங்கிலாந்து நாட்டில், "எலிசபெத் அரசியார் காலத்திலிருந்து இருந்து வருகின் றது. அந்நாட்டில் வறுமையாளர் இருப்பரானால், அவர் களுக்கு உணவும், உடையும், உறையுளும் கொடுத்துப் பேணுதற்காகவேண்டி, ஒரு சிலரை அரசியலாரே நியமித் துள்ளார்கள். ஆனால் அத்தலைவர்கள் அவ்வறியோர்க்கு அத்தகைய உதவியைச் செய்யுங்கால்,உள்ள நிறைவின்றிச் செய்யினும் செய்வர்; அவ்வறுமை யுற்றாரை வெறுத்து இழிவுபடுத்தவும் கூடும்; அவர்களை இழிவு தரத்தக்க, பயனற்ற பல வேலைகளைச் செய்யப் பணித்து, மறுப் பாராயின் சிறைக்கோட்டம் அனுப்பவும் கூடும். சுருங்கக் கூறின் அவ்வறுமையாளர், இத்தகையாரை அண்டி,பற்று கோடடைந்து வாழ்வதினும்,வறுமைக்குழியில் வீழ்ந்துழல் வதே சாலச் சிறந்தது என எண்ணக்கூடிய நிலையில் அவர் களை நடத்தவும்கூடும்; இவ்வாறு வறுமையான் உளவாம் இழிதன்மைகளைப் போக்குதற் பொருட்டு மேற்கொண்ட இம்முறையான், இறுதியில் முன்னையினும் மிக்க இழி தன்மை நாட்டில் உளவாதலைக் கண்டே, நாட்டில் எக் காரணத்தைக் கொண்டும் வறுமை யென்பதே, இருத்தல் கூடாது என அறிவுடையார் பலரும் கூறுவாராயினர்.

நாள்தோறும் பொருள்கள், நம்மை யறியாமலே பங்கிடப்பட்டே வருகின்றன என்று முன்னரே கூறியுள் ளோம். அவ்வாறு பொருளை பங்கிடுங்கால், ஒவ்வொரு வரும் கூடியவரை நேரியமுறையில் வாழ்வதற்கு, எவ்வளவு