பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காவிரி

பொருள் வேண்டுமோ, அவ்வளவு பொருளைப் பெறும் முறையில் கூறிடுதல் வேண்டும். யாரேனும் ஒருவர், தமக்கிட்ட வேலைப்பகுதியை, உரியகாலத்தில் செய்து முடிக்காமலோ, அன்றி முற்றிலுமே செய்யாமலோ விடுவரானால், அவரைக் கட்டாயப்படுத்தியோ, அன்றி வேறு முறையிலோ அவ்வேலையைச் செய்ய வற்புறுத்த லாமே ஒழிய, அதுகுறித்து. அவருக்குரிய பொருளைக் கொடாமல் அவரை வறியராக்குதல் செய்யக் கூடாத செய்கையேயாகும்.

இந்நெறியே நோக்குங்கால், பொருளைக்கூறிடுகின்ற பற்பலமுறைகளும் பயனற்றனவாகக் கழிதலான், நாட்டில் உள்ள எல்லா மக்களும், ஒத்த அளவுள்ள பொருள்களைப் பெறுகின்ற முறையில் கூறிடுதலாகிய முறையே சாலச் சிறந்தது என்பது பெறப்பட்டது. அம்முறை மேற்கொண் டாலன்றி, நாட்டில், ஆடம்பர வாழ்க்கை நீங்கி, மிடியும், மடியும், குறைந்து, கொலையும், களவும் இன்றி, பயனற். றதும், பழுதுபட்டதுமாகிய பொருள் குறைந்து, மிக்க வுணவும், சிறந்த உறையுளும், சீரியபாது காப்பும். பிணியின்மையும், செல்வச் செருக்கும் உளவாம் என்பதே. அறிவும் நெடுநாட் பயிற்சியும் உடைய பல்லோர் கொண்ட கொள்கையாம்.

-தமிழ்ப் பொழில் 1938-39 பக்கம் :461-476 1939.4

பக்கம் : 183-186