பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வந்தார்கள். 22-2-1942இல் சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தலைமை யில் நடைபெற்ற 'நற்றிணை மாநாட்டில்” "பாலை” என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றினேன்.அன்று முதல் அவர் தொடர்பு ஏற்படவே, அவர் வெளியிட்டு வந்த, “செந்தமிழ்ச் செல்வி' என்ற திங்கள் இதழில் சில கட்டுரைகளை எழுதி வந்தேன்; அவ்வாறு 'தமிழ்ப் பொழில்', 'செந்தமிழ்ச் செல்வி” வெளியீடுகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்; 1935இல் நான் எழுதிய முதல் கட்டுரையின் பெயராகிய காவிரி' என் பதையே இந்நூலின் பெயராக அமைத்துள்ளேன்.

பவள விழாக் கண்ட திரு. சுப்பையாப் பிள்ளை அவர்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப் பாகவும் என்அருமை நண்பர்,திரு. பழநியப்பன் அவர்கள் தம்முடைய "மலர் நிலையம்” வள்ளுவர் பண்ணை வெளியீடாகவும் வந்துள்ள என் நூல்களுக்குத் தமிழகம் தந்த ஆதரவினை, எழிலகம் முதல் வெளியீடாக வரும் "காவிரி' என்ற இந் நூலுக்கும் தருமாறு வேண்டு கின்றேன்; அதே நிலையில் எனக்குத் தமிழறிவூட்டிய பெருந்தகை ஒளவை து. துரைசாமிப்பிள்ளை அவர்களுக் கும், எழுத்துலகிற்கு அறிமுகம் ஆகாத என்னையும் மதித்து, புலவர் வரிசை, அரசர் வரிசை என்ற பெயரால் 22 நூல்களை வெளியிட்டு, எழுத்துலகிற்கு என்னை அறிமுகம் செய்வித்த, திரு. வ. சு. பிள்ளை அவர்களுக் கும், அவரைத் தொடர்ந்து, "தமிழர் வரலாறு” என்ற நூலை வெளியிட முன் வந்திருக்கும் அவர் மருகர், திரு.முத்துக் குமாரசாமி அவர்களுக்கும், **uo@rï• நிலையம்", வள்ளுவர் பண்ணை உரிமையாளர் திரு. பழநியப்பன் அவர்களுக்கும், நன்றிப் பெருக்கோடு கூடிய என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கா. கோவிந்தன்