பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுப்பியலும் உள்ள நிலையும்

"மக்கள் தாமே ஆறறி வுயிரே" எனச் சிறப்பித்துக் கூறப்பட்ட மக்கள் அனைவரும், தங்கள் உருவங்களில் சில: பல வேற்றுமை யுடையராகக் காணப்படுகின்றனர். அத்தகைய உறுவ வேறுபாடுகளைக் கொண்டு, அவர்தம், இயற்கைக் குணங்களை அறியலாம். இதை, நம் தமிழ்ப், பெரியார்கள் நன்கு ஆராய்ந்து, ரேகை சாத்திரம், அங்க சாத்திரம் எனப் பல நூல்களை எழுதி வைத்துள்ளனர்." ஒருவன் முகமே, அவன் உள்ள நிலையையும் வெளியாக்கும் என்பதை 'அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சங்கடுத்தது காட்டும் முகம்', 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற கூற்றுக்களே வலியுறுத்தும். இனி, கை, விரல் முதலியவற்றின் நிலைகளைக் கொண்டும், ஒருவன், குணங்களை அறியலாம் என நம் நாட்டார் கூறுவது:

  • பொன்செய் கொல்லன்தன் சொல்கேட்டு, கோவல. னைக் கொன்று வருமாறு பணித்த அரசன் பணியைமேற். கொண்டுவந்த ஊர்காப்பாளர், கோவலன் தன். மாசற்ற, முகப்பொலிவினையும், இலக்கண முறையே அமைந்த உறுப்பு நிலையினையும் நோக்கியவராய் பொற்கொல் லனைப் பார்த்து, "இலக்கண முறைமையின் இருந்தோ னிங்கிவன், கொலைப்படு மகனலன்' என்று கூறிய கூற்றி: னாலும் இதனை அறியலாம். (சிலப். 16: 162-163)