பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலர்ை, கா. கோவிந்தன் - 77

தொடங்குவர்; எனினும், தொடங்கிய வினைகளில் வெற்றியே பெறுவர். ஆயினும், சிற்சில காலங்களில், அளவிறந்து எண்ணிப்பார்ப்பதனால், அவ்வினை கைவரப் ப்ெறாதும்போம். சில விரல்கள் வழவழப்பாகவும், அடி . தடித்து துணி சிறுத்தும் இருக்கும். அத்தகைய விரலுடையார், இயற்கையறிவு மிகவும் உடையராய், ஒரு பொருளாராய்ச்சியின் முடிந்த முடியினை, எளிதில் பற்றக் கூடியவராயும், தக்கதின்ன் தகாதன இன்ன வென்றும், வெறுப்பன, விழைவன இன்ன என்றும், அறியும் ஆற்றலுடையவராயும் இருப்பர். அவர்கள் தொடக்கத்தே கூறும் பொருள், மிகத் தெளிவுடைய தாகவும், பொருட் செறிவுடையதாகவும் இருக்கும்.

விரல்கள் நீண்டு, மென்மைத்தன்மையுடையவாகவும், பருத்தும் இருப்பின், அது பொருள்களை, தருக்க முறையே ஆராயும் .நெறிக்கண் விரைவுடைமையினைக் காட்டும். இத்தகைய விரலுடையார், உடனுக்குடன் தங்கள் ஆராய்ச்சி நெறிக்கண், ஆராய்ந்து பட்டபொருள், இயற்கையறிவின் பயனாக முதன் முதலிற் உண்டாய Oum Geir (Calculative Intuititive Assessments) <Ð,Su இரண்டனுள், கோடுதற்குரிய பொருள் எது என்பதைத் துணிய மாட்டாராய் அல்லற்படுவர். -

பொதுவாக, பருத்த அடிப்பாகம், இயற்கையறிவுடை மையினையே காட்டும். அஃது அதிகமாகப் பருத்திருக்கும் விரலுடையார், ஆராயும் அறிவுடையராயும்,பிறர் க்கென வாழாது, தனக்கென வாழும் இயல்புடையராயும், இவை வன்மைய, இவை மென்மைய என்றுணரும், மெய்யுணர்வு (பரிச உணர்வு) மிகவுடையராயும் இருப்பர்.

நீளமும், சிறுமையும், நீண்ட கணுக்களும் பொருந்திய விரல்களுடையார், வியக்கத்தக்க ஆராய்ச்சி நிறைந்த