பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - காவிரி

அறிவும், பிறர்செய்கைகளில் கண்ணோக்கமும், பிறர்பால் ஐயங்கொளலும் உடையராவர். அன்னார், தேரான் தெளிவும், தெளிந்தான்்கண் ஐயுறவும்-தீரா இடும்பை தரும்" என்பதற்கிணங்க இடுக்கண் அடைவர்.

இதுகாறும் விரல்களைப், பொதுவாக ஆராய்ந்தாம்: இனி அவைகளைத் தனித்தனி எடுத்தோதி ஆராய்வல்.

ஆள்காட்டும் விரல், தன்னளவில் மிக்கு, அஃதாவது நடுவிரலை யொப்ப வளர்ந்திருப்பின், அது வீரமும், அறிவும் இல்லாதிருப்பவும், அவையுடையான்போல நடந்துகொள்ளும் இயல்புடைமையினைக் காட்டும், இத்தகைய விர்லுடையார், தங்களுக்குப் பலர் குற்றேவல் செய்ய விரும்புவதுடன், அத்தகைய குற்றிளையோர் பால், எஞ்ஞான்றும் சினந்து கொண்டேயிருப்பர். மற்று அவ்விரல் நடுவிரலின் குறைந்து இருப்பின், அது: தன்னைத்தான்ே மதிக்கும் மதிப்புடைமையினைக் காட்டும்.

நடுவிரல், கனமுடையதாக இருப்பின், அஃது அதனை புடையான், ஆழ்ந்து ஆலோசிக்கும் இயல்பு, கூரிய அறிவு என இவைகளையுடையான் என்பதை வெளிப்படுக்கும்.

சிறு விரலையடுத்த, மோதிர விரல், தன்னிலையின் மிக்கு, நடுவிரலிற்குத்தக வளர்ந்திருப்பின், அஃது எப் பொருட்கும் அஞ்சா முரட்டுத் தன்மையினை உணர்த்தும். அத்தகையார், வட்டாடும் தொழிலினை ஒழித்தல் வேண்டும். அங்ங்ணமின்றி அது நடுவிரலைக் காட்டிலும் குறைந்து இருப்பின், அதனையுடையார், அழகிய ஓவியம் தீட்டும் ஆற்றலுடையராயும், புகழ், பொருள் விரும்பும், உள்ளமுடையராயும் இருப்பர்.