பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள் நாடு

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றே. எவ்வழி நல்லவர் ஆடவர் - அவ்வழி நல்ல்ை வாழிய நிலனே.

-ஒளவையார்.

அரசியல் நன்கு நடைபெறுவதற் கேதுவாய உறுப் புக்கள் ஆறனுள், முதலாவதாய அமைச்சுக்குப் பின்வைத்து எண்ணப்படும் சிறப்பினது நாடாம். அந் நாட். டினைப்பற்றிக் கூறத் தொடங்கிய வள்ளுவப் பெருந்த கை யார், முதலாவதாக அந் நாட்டில் 'தள்ளா விளையுள்' இருத்தல் வேண்டும் எனக்கூறுகின்றார். ஒரு நாடு. நாடாக இருக்கவேண்டுமாயின், அந்நாட்டில் உயிர்ப் பன்மைகள் வாழ்தல் வேண்டும். உயிர்ப்பன்மைகள் இன்றேல், நாடு இல்லையாம். தலைமகனைப் பிரிந்துறை. யும் தலைமகள், தன் தனிமை நிலைக்கு வருந்துவாள் "வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத்திருந்த தணி, மகன் போன்றே (தற். 153) எனக் கூறுமுகத்தான்் குடி மக்கள் அற்ற ஊரைப்பாழுர் எனக் கூறு மாறு அறிக. "பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய, பொதுவறு சிறப்பின் புகார்' (சிலப் 1: 15-16) எனவும், "பதியெழ.