பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-82 காவிரி

வறியாப் பழங்குடி கெழீஇ" (மலைபடு 479) என்வும் வருவன ஈண்டு நோக்கற்பாலனவாம். அத்தகைய உயிர்ப்பன்மைகள் வாழ்தல்வேண்டுமேல், அவ்வுயிர்களை வாழச் செய்வதாய உணவுப் பொருளும் வேண்டுமாம்: என்னை? "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்பவாகலின் அவ்வுணவுப் பொருளும் குறைவின்றி நிறைந்திருந்தா லொழிய, உயிர்ப் பன்மைகள் தாம் வேண்டும் பொருளை வேண்டியாங்குப்பெற்று உண்ணுதல் இயலாதாகலின், அப் பொருள் நிறைந்தே இருத்தல் வேண்டும் என்பார். "விளையுள்' என வாளா கூறாது 'தள்ளா விளையுள்”

எனச் சிறப்பித்துக் கூறினார்.

அன்றியும், நாட்டிற்கு அணியெனக் கூறப்பெறும்

இயல்பினவாய பெரும்பொருள் உடைமை, வரும் பொறை தாங்கல், அரச இறை இறுத்தல், பசி, பிணி, பகை, பல்குழு, உட்பகை, கொல் குறும்பு ஆய

இவை,இன்மை முதலாயவற்றிற்கும் ஏதுவாய் நிற்பதுவும் அவ்வுணவுப் பொருளே யாதலின் நாட்டிறகு இன்றி யமையாது வேண்டப்படுவனற்றுள் 'தள்ளா விளை யுளை' முற் கூறினார்.

இனி, அடுத்த நிலையாக வள்ளுவப் பெருந்தகை யார், தக்கார் உண்மையினை அந்நாட்டிற்கு உறுப்பாகக் கூறுகின்றார். தக்காராவார் தகுதி உடையராவர்; தகுதியாவது உயர்வுடைப் பெருமக்கள் பால் கிடந்து மிளிர்வதாய நற்பண்புகளாம். ஆகவே, தக்காராவார்; நற்குணங்கள் பலவற்றையும் குறைவறப் பெற்று நிற்கும் சான்றோராவார். சான்றோரைப் பெறாத நாடு, தள்ளா விளையுள் முதலாய பல வளங்களையும் பெற்று நிற்பினும், அவற்றைப் பெறாத நாடாகவே எண்ணப் படும். மக்கள் "தள்ளா விளையுள் முதலாயினவற்.