பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 83

றைப் பெற விரும்புவது, நோயற்ற உடல் நலத்தைப் பெற்று வாழவேயாம். நாடு, தள்ளா விளையுளைப் பெற்றிருந்தும், சான்றோர்களைப் பெறாதாயின், அந்நாட்டில் உள்ளார், நோயற்ற வாழ்வைப் பெறாது நோயுற்ற தாழ்வையே பெற்று நிற்பர். என்னை? நாட் டில் சான்றோர் இலர் எனவே, சாலார் உளர் என்பது தெளிவாம். சான்றோர் குறைந்து சாலார் நிறைந்து நிற்கவும், நாட்டின் நடுவுநிலைமை கெடும் எனின், சான்றோரே இலராக, சாலாரே நிறைந்து நிற்பாயின், அந்நாட்டில் யாண்டும், எக்காலத்தும், அமைதியின் மையே தலை சிறந்து நிற்கும். அமைதியற்ற நாட்டில் வாழ்வாரும் அமைதியற்ற வாழ்க்கையினை மேற் கொள்ள வேண்டியவராய், அதன் காரணமாக நோயுற்ற உடலையும் பெற்று வாழ்வர்: என்னை? உள்ளக்கலக் கமே, உடல் நலக்குறைவிற்குக் காரணமாம் ஆதலின். யாண்டு பலவாகவும் நரையில்வாதற்குரிய காரணங் களை வினாவியோர்க்குப் பிசிராக்தையார். அமைதியுற்ற வாழ்வில் வாழ்தற்கு ஏற்றனவாய, மனைத்தக்க மாண்பு டைய மனையாளையும், அறிவறிந்த மக்களையும், குறிப்பின் வழிநிற்கும் இளையாரையும், அல்லவை செய் யாது அரசாளும் அரசனையும், ஆன்ற விந்தடங்கிய சான்றோர் பலர் வாழும் நாட்டுக் குடியிருப்பினையும் தாம் பெற்றிருந்தமையே காரணமாம், எனக் கூறுவதும் காண்க. - -

அன்றியும், 'நெல்லும். உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்ப வாகலின், உலகிற்கு உயிராவான் அரசன் என்பது தெளி வாம். அவ்வரசன், எத்துணை நற்குண. நற்செயல்கள் உடையனாயிலும், ஒரோவழி முக்குண வயத்தான்் முறை மறந்து செய்யத்தகாதன செய்தலும் கூடும். அவ்வாறு