பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காவிரி

செய்யின், அரசற்கே அன்றி அந்நாட்டிற்கும் கெடுவன பலவாம்; ஆகலின் அச்செயலைத் தடுத்தல் இன்றியமை, யாததாகும். அவ்வாறு அரசனை, அச்செயல் செய்யாமல் இருக்கும் வண்ணம், இடிக்கும் துணையாய சொற்களைக் கூறி, நல்வழிப்படுத்துவார் சான்றோராவர்; அத்தகைய சான்றோரைப்பெறாத, அரசனது ஆளுகையின் கீழ் உள்ள நாடு துன்பங்கள் பலவற்றிற்கு நிலைக்களமாம். "இடிப் பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும்” என்பது வள்ளுவர் வாக்கு. - இந்நெறி, நாட்டிற்கு வரும் துன்பங்களைப் போக்கி, நாட்டிற்கு நலம் பல புரிந்து, உலகியல் நன்கு நடை பெறச் செய்வார் சான்றோர் என்பது தெளிவாம். இது பற்றி யன்றே சான்றவர் சான்றாண்மை, குன்றின் இருநிலந்தான்் தாங்காது மன்னோ பொறை'(குறள், 990) எனவும், 'பண்புடையார்ப் பட்டுண்டு உலகம், அது வின்றேல், மண்புக்கு மாய்வது மன்” (குறள், 996) எனவும் பிறாண்டும் கூறுவாராயினர்.

உலகியல் இடையறாது நன்கு நடைபெற்று வருவதற். குரிய காரணங்களை வினாவியோர்க்கு விடையாகக், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியார் பாடிய உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்; புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே,

-புறம் 182. என்ற பாட்டு ஈண்டு நினைவுகூரற்பாலதாம். -