பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 85

இனி, நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற சொற்றொடரை நோக்கத் 'தள்ளாவிளையுளு’க்கு முதற்பெருங் காரண மாய மழைக்குங் காரணமாய் விளங்குவார் அச் சான்றோரேயாவர் என்பதுTஉம் பெறுதும்.

மூன்றாவதாகச், .ெ ச ல் வர் உடைமையினை நாட்டிற்கு உறுப்பாக வள்ளுவப் பெருந்தகையார் குறிப் பிடுகின்றார்: அச்செல்வரை, ஈண்டு, "தாழ்விலாச் செல்வர்” எனச் சிறப்பித்துக் கூறுகின்றார். தன்னைப் பெற்றார் யாவருக்கும் தன்முழுப்பயனையும் அளிப்பதில் செல்வம் ஒரே நிலையையுடையதாகவும் அதனைத் "தாழ்வுடைச் செல்வம்” எனவும், "தாழ்விலாச் செல்வம்' எனவும் பிரித்துக்கூறல் ஏன் என ஆராய்தல் வேண்டும். தம்மை உடையார்க்கு இன்பம் அளிப்பதில் செல்வம் ஒத்த தன்மைத்து என்பது உறுதியாகவே, அச் செல்வத்திற்கு உயர்வு தாழ்வு கூறுவது, அச்செல்வத்தினை உடையார்தம் உயர்வு கருதியேயாம். இனி, அச் செல்வத்தினை உடையார்க்கு உயர்வு தாழ்வுகள் உள வாதற்குரிய காரணங்களையும் ஒரு சிறிது நோக்குவாம். 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிர் அன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை” (குறள், 55.) எனவும், "பழிமலைந் தெய்திய ஆக்கத்தின், சான்றோர் கழிநல் குரவே தலை” (குறள் 657) எனவும் கூறப்படுதலை நோக்க, பொருளிட்டுங்கால் அறவழிநின்று ஈட்டுதல் வேண்டும் என்பது தெளிவாம். அறவழியாவது அரச னாயின் ஆறிலொன்றாகிய பொருள்தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும்', வணிக ராயின், கொள்வது மிகையும், கொடுப்பது குறையுமாகா மல் ஒப்ப நாடிச் செய்தலு"மாம், எனவே இந் நெறியே

&т — 6