பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 óraG伊

பெருமலைகளையும், இத்தகைய சிறப்புடைமை கண்டு இதனைப் பெற விழைந்து பிறநாட்டரசர் தன் மீது படையெடுத்து வருவாராயின், அப்பகை வேந்தரை வென்று தன்னைக் காக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனை யும், அவ்வரசன் நின்று வினை செய்தற்காம் பேரரண் பலவற்றையும் பெற்று விளங்குவதோடு, கோவின் செம்மையால் பசி இன்றியும், குடையின் தண்மையால் பிணி இன்றியும், வேலின் வெம்மையால் பகையின்றியும், சான்றோர் உண்மையால் பலவேறுபட்ட அரசியல் குழு உக்களும், உட்பகையும், வேந்தலைக்கும் கொல் குறும் பும் இன்றியும் இயல்வதே வள்ளுவர் கண்ட நாடாம்.

-செந்தமிழ்ச் செல்வி 1941-42 பக்கம் : 185-190