பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காவிரி

பெற்ற இன்பத்தினை அவன் என்றும் ஒருநிலைத்தாகப் பெற விரும்புதலும் இயல்பே. அவ்வறநெறி வாழ்வதாற் பெற்ற இன்பத்தினைச் சிறிது மிகைப்படுத்தித் தருவது; அவ்வறநெறியே ஈட்டிய பொருளாகும். இவ்வாறு அற நெறி நின்று பெற்ற இன்பத்தினைப் பரந்த அளவில் தருவது பொருள் எனக் கண்டான், அப்பொருளினை முன்னோர் கூறிய அறநெறியே நின்று பெற்று வாழ்கின் றான். இவ்வாறு அறநெறி நின்றும், பொருள் ஈட்டி யும் பெற்ற இன்பமும் என்றும் ஒரு நிலையில் இலதாய் நாள்தோறும் குறைவுறுவதைக் காணும் அவன், குறை வின்றி நிறைந்த ஓர் இன்பத்தினைப் பெற முயற்சித்து இறுதியில் அவ்வின்பத்தையும் பெற்று நிற்பன். அவ் வின்பத்தையே வீட்டின்பம் என்று நூல்கள் கூறுகின் றன. இந்நெறி அறத்தால் பொருளும், பொருளால் இன்பமும் இன்பத்தால் வீடும் பெற விழைதலே மக்கள் தம் மனத்தின் இயல்பாம். இவ்வியல்பினின்றும் வேறுபடு வார் மக்கள் எனும் தகுதிப்பாட்டிற்கு உரியரல்லர். இவ்வறம், பொருள், இன்பம், வீடு ஆய இந் நாற் பொருளையே, நம் தமிழ் நாட்டினர், அகம் புறம் என இரண்டனுள் அடக்கிச் செல்வாராயினர். அகமாவது மக்கள், என்றும் தம் உள்ளம் குறைவின்றி நிறைந்த இன்பக் கேணியில் திளைத்திருக்க வாழும் வாழ்க்கை யாம். புறமாவது அவ்வுள்ளம் அவ்வின்பக்கேணியில் படிந்து இருத்தற்கு உறுதுணையாய பொருளினை அற வழியே ஈட்டுதற்கு மேற்கொள்ளும் முயற்சி வகைகளாம். இனி, மக்கள், அறம், புறம் ஆய இரண்டையும் ஒப்பக் கருதாது, புறத்தை மறந்து அகம் ஒன்றையே பற்றியோ அன்றி, அகத்தை மறந்து புறம் ஒன்றையே பற்றியோ வாழ்வாராயின், அவர்கள் வாழ்க்கை பயனு டைய வாழ்க்கை யாகாது. மக்கள் அகத்தையும், புறத்தையும் ஒப்பக் கருதிப் பேணிவந்த பண்டைக்