பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 91

காலத்தே அவர்தம் வாழ்க்கை செம்மையுற்றிருந்தது.

இடைக்காலத்தே மக்கள் அகம் ஒன்றையே கருதிப் புறத்தை மறந்தார்கள். ஆகவே அவர்கள் வாழ்க்கை நிலை கெடுவதாயிற்று. அவ்வாறு கெட்டவருள், சச்சந்தனும், சேரன்கணைக்கால் இரும்பொறையும் சேர்ந்தோராவர். முன்னோன், தன் மனைவியால் பெற லாகும் காம இன்பம் ஒன்றையே பெரிதாக எண்ணிப் புற நிகழ்ச்சிகளை அறவே கைவிட்டு, அரச உரிமையையும் அமைச்சன் கட்டியங்காரன்பால் ஒப்படைத்து வாழ்ந்ததி னால், அரசை இழந்து, இல்லாளை இழந்து, இறுதியில் உயிரையும் இழந்தான்். பின்னோன் ஆயுந்தொறும் ஆயுந் தோறும் இன்பம் பயப்பதாய நூல்களை ஆராய்வதன் கண்ணேயே தனது முழுக்கருத்தையும் செலுத்தி, தனக் குரிய புற ஒழுக்கமாய நாடு காவலை நாடாது ஒழியவே, அவன் சோழன் செங்கணானால் சிறை செய்யப்பெற்று, சிறையிலேயே உண்ணவும் நீர் இன்றி, உயிரையும் இழந் தான். -

இவ்வாறு இடைக்காலத்தே மக்கள், அகம், புறம் ஆய இரண்டினையும் ஒப்பக் கருதாது, அகம் ஒன்றி னையே பற்றி வாழ்க்கையின் முழுப்பயனையும் எய்தாது கெட்டது போன்றே, இக்காலை, மேனாட்டினர், அகந்தை அறவே மறந்து புறத்திலேயே தம் நாட்டத் தைச் செலுத்திக் கெட்டொழிவதைக் காணும் நாம், அகம், புறம், ஆய இவற்றின் ஒன்றிடத்தே மட்டில் உளத்தைச் செலுத்தாது, நம் பண்டை முன்னோர் போன்று அகத்தையும் புறத்தையும் ஒப்பக் கருதி வாழ்ந்து உயர்நிலை பெறுவோமாக.

இனி, பண்டையோர் அகத்தையும், புறத்தையும் ஒப்பக் கருதி வாழ்ந்த உயர்வுடையோர் என்பதற்கு ஒரு சில சான்றுகளைக் காட்டி இக்கட்டுரையினை முடிக்கின்