பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 93,

அவன் உள்ளம் கொள்ளும் இன்பத்திற்கு எல்லையும் கூற முடியுமா? இவ்வாறு புறத்தே தொழிலாற்றிப் பெற்ற

இவ்வின்பத்தினை ஒரு புலவன் 'வினைமுடித்தன்ன இனி

யோள்' (நற்றிணை-3) என அக இன்பமாகிய பெண்

இன்பத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவானாயின், அக்கால மக்கள்

உள்ளம், அக இன்பத்தையும், புற இன்பத்தையும் ஒப்பக் கருதி வந்தன என்பது தெள்ளிதிற் புலனாம் அன்றே?

மேலும், ஒரு காலத்து ஒரு பொருளான் ஐம்புலனும் நுகர்தற் சிறப்புடைத்தாய இன்பம்” எனவும், "சுவை பல என்று கூறுவார் கூறுக, யாம் கூறுவது இன்பச்சுவை ஒன்றனையுமே” எனவும் பாராட்டிப் பேசப்பெறும் இன்பத்தை அளிப்பாராகிய பெண்களை, புற இன்பம் பெறும் எண்ணத்துடன் வினையாற்றுவார் அவ்வினைக் கிடையே நினைத்தலும் கூடாது என்பர், "கிழவி நிலையே வினையிடத்துரையார்” என்று கூறி, அவ் வினையை முற்றுப்பெற முடித்து அவ்வினையாலாம் முழுப்பயனையும் நுகருங்கால், பெண் இன்பம் தம்மை யறியாதே தம் மனத்திடைத் தோன்றி நிற்கும் என்பார் "வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” என்றும் கூறிய ஆசிரியர் தொல்காப்பியனார் அவர்களின் சொல்லே பண்டையோர் அக இன்பத்தையும், புற இன்பத்தையும் ஒப்புக் கருதிய உயர்பேராளர் ஆவர் என்பதைக் குன்றிடை விளக்கென நின்று காட்டுகின்றது. மேலும், சான்று பல காட்டிச் செல்வே மாயின் கட்டுரை விரியுமென்றஞ்சி இம்மட்டில் முடிக்கின்றோம்.

செந்தமிழ்ச் செல்வி 1942-43தொகுதி: 20: பக்கம் : 167-170