பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ll||606)

உலகிடை வாழும் மக்கள் பலரும் உயர்நிலை எய்தப் பெரிதும் முயன்று ஆங்காங்சே வல்லரசுகளின் மாநாடுகள், அரசியல் மாநாடுகள், அறிவியல் மாநாடுகள் போன்ற புதுமை போற்றும் மாநாடுகள் பலப்பல கூட்டும் இக் காலை நாமும் பழமை பேணும் மாநாடு ஒன்றைக் கூட்டி யுள்ளோம். 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர்: மகிமை யில்லை" எனக் கூறிச் சிலர் எள்ளி நகையாடலும் செய்வர் ஆயினும், உயர்நிலை எய்த விரும்பும் ஒவ்வொருவரும், தம்மைச் சுற்றியுள் ளார் தம் வாழ்க்கை நிலையை உற்று நோக்குவதுடன், தந்நாட்டின் இறந்தகால மக்களின் வாழ்க்கை நிலை யினையும் உற்று நோக்குதல் வேண்டும் என்பதை மறத்தல் கூடாது. இக்கால வாழ்க்கையுடன் இறந்தகால வாழ்க் கையினை ஒப்பிட்டு நோக்கி, இக்கால வாழ்க்கையினும் இறந்தகால வாழ்க்கை இழிவுடைத்தாயின் அதைத் தள்ளுதலும், அவ்வாறன்றி அது சீரும் செம்மையும் வாய்ந்து ஈடும் எடுப்பும் இன்றி இறப்பச் சிறந்ததாயின் அதைக் கொள்ளுதலும் செய்தல் வேண்டும். முன்னோர் 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல“ என்று கூறினாரேயன்றி, பழையன கழிந்தே புதியன புகுதல் வேண்டும்’ என்று கூறினார் அல்லர்.

இவ்வாறு இக்கால வாழ்க்கையோடு இறந்தகால வாழ்க்கையை ஒப்பிட்டு நோக்கி இக்கால வாழ்க்கை