பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

போட்டு விட்டது. அந்த ரயில்வே பாலம் பழுது பார்க்கப் படுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. அது வரை விழுப்புரம்- சென்னை நேர் ரயில் வண்டி இணைப்பு நின்று விட்டது. அதனால் ஒரு நாளுக்கு இரண்டு கோடிக்கு மேல் ரயில்வேக்கு நஷ்டம் என்று கூறப்பட்டது. அது ஒரு புறமிருக்க, ஏரியில் எக்கல் மண் ஏறி விட்டதே, அதிக தண் னிர் வரும் போது தாங்க முடியாமல் போவதற்குக் காரண மாகும்.

இராமநாதபுரம் பெரிய கண்மாய், நாரை பறந்து கடக்க முடியாத 48மடைகளைக் கொண்டது. வைகை நதியே அதில் வந்து நின்று விடுகிறது. இப்போது துார்ந்து போய் பெரும் பகுதி செயலற்றுக் கிடக்கிறது. ராஜ சிங்க மங்கலம் பெரிய கண்மாய், தமிழ் நாட்டில் உள்ள மற்றொரு பெரிய ஏரி யாகும். அந்த ஏரியும் துார்ந்து கிடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தென்னேரி என்று ஒரு பெரிய ஏரி. அதன் கரைகள் தாழ்ந்து கிடக்கின்றன.

மதுரை அருகில் மாடக்குளம். அந்த மாடக்குள ஏரி மிகப் பெரியது. வைகையிலிருந்து அதற்குக் கால் வருகிறது. மாடக்குளம் உடைந்தால் மதுரைக்கே ஆபத்து என்பது பழ மொழி இப்போது மதுரைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏன் என்றால் மா. க்குளத்தில் பழைய அளவில் மூன்றில் ஒரு பகுதி கூட தண்ணிர் நிற்பதில்லை.

தமிழ் நாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் மற்றொன்று தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் ஏரியாகும். இந்த ஏரிக்கரையின் நீளம் 4 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். இதன் ஆயக்கட்டு பாசனப் பரப்பு 27 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகம். இந்த ஏரியும் நான்கு மீட்டர் உயரத்திற்கு மேல் துர்ந்து விட்டது. கொள்ளளவு பாதிக்கும் குறைந்து விட்டது. அது கட்டப்பட்ட காலத்திலிருந்து சரியாகப் -1(5/ பார்க்கப்படவில்லை.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள ஐம்பதினாயிரம் பாசன ஏரிகளுக்கும் ஐம்பதினாயிரம் விவரங்கள் சொல்லலாம். இந்த நீர் நிலைகள் பெரும்பாலும் சேதமடைந்து கிடக் கின்றன. அதனால் தமிழகத்தின் பாசனம், குடிநீர், நிலத்தடி நீர் ஊற்றுகள், சுற்றுப்புறச் சூழல் முதலியவை பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் அடுத்த முக்கியமான பாசன ஏற்பாடு கிணற்றுப்பாசனமாகும்.