பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 9 ()

தமிழகத்தில் மொத்தம் சுமார் 20 (இருபது) லட்சத்திற்கு மேல் பாசனக்கிணறுகள்.இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக் கிறது. இதில் சுமார் 13 ல்ட்சம் கிணறுகளுக்கு மேல் மின் சார பம்பு செட்டுகளும் ஆயில் என்ஜின்களும் இணைக்கப் பட்டவை. 10, 5 லட்சம் மின்சார பம்பு செட்டுகள் 3 லட்சம் ஆயில் என்ஜின்கள் ஒடுகின்றன. கிணற்றுப்பாசனம் கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டின் விவசாய வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கை ஆற்றியிருக்கிறது.ஒரு பம்பு செட்டிற்கு தாரசரி ஐந்து ஏக்கர் பாசனம் கிடைக்கிறது எனக் கணக்குப் போட்டால் பன்னிரண்டு லட்சம் பம்பு ச்ெட்டுகளும் சேர்ந்து த மார் 60 (அறுபது லட்சம்) ஏக்கர் நிலத்திற்கு ப் பாசனம் கொடுத்திருக்கிறது. மேட்டுர் அணை மூலம் தண்ணிர் வந்து தஞ்சையில் பாசன வசதி பெற்றுள்ள நிலம் சுமார் 12வட்சம் ஏக்கர் எனக் கணக்குக் கூறுகிறார்கள். அப்படியானால் தஞ்சையைப் போல் ஐந்து தஞ்சை மாவட்டங்கள் பம்பு செட்டுகள் மூலம் பாசனம் ப்ெறுகின்றன. இந்த அறுபது ஆட்சம் ஏக்கர் மூலம் கிடைத்த உற்பத்திTதமிழகத்தின் செல்வத்தைப் பெருக்கியிருக்கிற்து.தமிழகத்தின் பஞ்சாலை களுக்கு வேண்டிய பருத்தியைக் கொடுத்திருக்கிறது தமிழ கத்தின் சர்க்கரை ஆலைகளுக்கு வேண்டிய கரும்பைக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் எண்ண்ெய் மில்களுக்குத் தேவையான நிலக்கடலைய்ையும் இதர எண்ணெய் வித்துக் தளையும் - கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் சவ்வரிசி சேமியா, தொழிற்சாலைகளுக்குத் தேவையான குச்சிக் கிழங்கைக் கொடுத்திருக்கிறது. த்மிழக மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைக் கொடுத்திருக்கிறது. இதர் தானிய்ங் துளையும், 18 வகை வாழைப்பழங்களையும் மற்றும் திராட்சை, ஆரஞ்சு, கொய்யா மா’ பலா, முதலிய கனி வகைகளையும் தட்டாமல் கொடுத்து வந்திருக்கிறது,

இந்தப் பாசனக்கிணறுகளுக்கான பம்பு செட்டுகள் வைப் தற்கு அரசுகடன் கொடுத்தது. அந்தக் கடனை வட்டிக்கு மேல் வட்டி போட்டு திரும்பிவாங்கி விட்டது. பம்பு செட்டு கள் போடுவதற்கான செலவைக் காட்டிலும் அதிகமாகவ்ே பல்வகை முறைகளில் குறைந்தபட்சகட்டணம் என்று ஆதிக பட்சமாகவே பணம் வர்ங்கி விட்டார்கள். அத்துடன் நிர்வாகச் சீர்கேடு, ஊழல்கள், லஞ்சம் காரணமா கவும விவசாயிகள் G L5 I I 855[]] நஷ்டமடைந்திருக் கிறார்கள். அதற்கு மேல் மின்சார கட்டணத்தையும் படிப் படியாக உயர்த்தி அரசு விவசாயிகளைக் கொள்ளையடித் திது .

இப்போது கிணற்றுப் பாசனத்திற்கு தமிழகத்தில் ஒரு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நிலத்தடி நீர் கீழே போய்த் கொண்டேயிருக்கிறது. கிண்றுகள்ை ஆண்டு தோறும் விவசாயிகள் ஆழப்படுத்திக் கொண்டேயிருக் கிறார்கள். பல கிணறுகளில் தண்ணிர் வற்றி விட்டது. ஏரி