பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O. 103

லோன், பொறுக்கு விதை லோன், பயிர் லோன், பராமரிப்பு லோன் இவ்வாறு பலவகை கடன்கள், வாங்கி நமது நாட்டு விவசாயிகளும் விவசாயத் தொழிலும் கடனில் மூழ்கி விட்டது. இப்போது விவசாயிகளுக்கு வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லை. தவணைகள் கடந்து விட்டன. வட்டி அதிகரித்து விட்டது. அபராத வட்டிகள் வந்து விட்டன. வட்டிக்கு வட்டியும் வந்து விட்டது.

இதனால் கடன் பாக்கி அசலுக்கு மேல் இருமடங்கு மும் மடங்கு கூட அதிகரித்து விட்டது. இந்தக்கடன் பாக்கி களைக் கட்ட முடியாத கடுமையான நெருக்கடி நிலை இந்திய விவசாயிக்ளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பழைய கடன் பாக்கி இருப்பதால் புதிய கடன் கிடைப்பதில்லை. அதனால் விவசாயிகள் தனியார்களை நோக்கியும் போக வேண்டிய திருக்கிறது. அதனால் மேலும் அதிகமான கடன் பளுவும் வட்டிப் பளுவும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்திய விவசாயிகளின் கடன் பளு தீராத நெருக்கடியாக நீடித்துக் கொண்டிருக்கிறது. கடன் பளு. வைக் குறைக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி தொடர்ச்சி யாக இருந்து வந்தது.

1989-ம் ஆண்டில் மத்தியில் வி. பி.சிங் தலைமையில் ஆட்சிக்கு வந்த தேசீய முன்னணி அரசு விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் வரை யிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு செய்துள்ளது. இது விவசாயிகள் நீண்ட காலப் போராட் டத்தின் வெற்றியாகும்.

கட்டணத்தில் மின்சார கட்டணம் மிக முக்கியமானது. மின்சார கட்டணம், விவசாயிகளுக்கு படிப்படியாக உயர்த் தப்பட்டது. கிணறுகளில் தண்ணிர் குறைந்துவருகிறது. அதனால் இறவை குறைகிறது. மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சார பயன்பாடு குறைகிறது. ஆயினும் கட்டணத்தின் விகிதமும் மொத்த அளவும் குறைய வில்லை. மாறாக அதிகரித்து வருகிறது .

தமிழகத்தில் மின்சாரக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். கடன் பாக்கிகளை ரத்து செய்ய வேண்டும் என்று நெருக்கடி முற்றி 1970-ம் ஆண்டுகளில் பெரிய கிளர்ச்சிகள் ஏற் ப்ட்டன. கிளர்ச்சிகளை துப்பாக்கி கொண்டு போலீஸ் தடிகளைக் கொண்டு அடக்க முடிந்ததே ஒழிய பிரச்னை களைத் தீர்க்க முடியவில்லை. விவசாய பம்பு செட்டு களுக்கு இலவச மின்சாரம் கொடுக்க 1990-ம் ஆண்டில் திமுக அரசு ஆணையிட்டுள்ளது.

டிஸல், பெட்ரோல் விலை உயருகின்றன. பஸ் கட்டணம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் சாதாரண