பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 6 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

ஆட்சியைப் பார்த்துக் கூறினான். இப்போதைய கொள்ளை அதையும் மிஞ்சி விட்டது. சுதந்திரம் கிடைத்த இந்த நாற்பது ஆண்டுகளிலும் இந்தக் கொள்ளை தொடருகிறது .

ஆரசினுடைய விலைக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை இந்திய முதலாளிகளுக்கும் பெருமுதலாளி

களுக்கும் சாதகமாகவே அமைந்திருக்கிறது. பருத்தி விலை உயரும் போது, வெளிநாடுகளிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்து விலையை வீழ்த்துவார்கள்.

சமையல் எண்ணெய் விலை உயரும் போது வெளிநாடுகளி லிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து அதன் விலையை வீழ்த்துவார்கள். வெல்லம் கிராக்கியானால் வெல்லத்தின் ஏற்றுமதியைத் தடை செய்து, மார்க் கட் விலையை மொத்த வியாபாரிகள் வீழ்த்துவார்கள்.

இந்த வியாபார சூதாட்டத்தில் விவசாயிகள் சிக்கித் தவிக் கிறார்கள். உற்பத்தி பெருகினாலும், கடின உழைப்பைச் செலுத்தினாலும் ஆண்டு தோறும் நஷ்டமடைந்து, விவ சாயிகள் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியிருக் கிறார்கள்.

வரி, வட்டி, கட்டணம், விலை ஆகியவை இந்திய விவசாயிகளின் கழுத்தை தெரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இன்றைய இந்திய விவசாய உற்பத்தியில் கடுமை யான தேக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் விவசாயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து விவசாயி விடுவிக்கப்பட வேண்டு மானால் அது முதலாளித்துவப் பாதையில் சாத்தியமில்லை. எனவே இத்திய விவசாயிகளுக்கு முன்பாக இந்தியப் பெரு முதலாளிகளும் முதலாளித்துவ அரசும்தான் பெரும் எதிரிகளாக வந்து முன் நிற்கிறார்கள்.

எட்டாவதாக, விவசாய உழைப்பில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளும் இன்றையவிவசாய நெருக்கடியைத் தீவிரப் படுத்துகிறது.

விவசாயத் தொழில் கட்டுபடியாக வில்லை. சிறு விவசாயி கள், நடுத்தர விவசாயிகள், பெரிய விவசாயிகள் அனைவரு மே விலையினால் பாதிக்கப்படுகிறார்கள். இதர தொழில் களையும் பார்த்துக் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு ஒரளவு சமாளிக்க முடிகிறது. விவசாயத்தை ” நம்பியிருப்பவர்களுக்கு விவசாயம் கட்டுபடியாக இப் தி ைவ).

சிறு விவசாயிகளும் நடுத்தரவிவசாயிகளும் விவசாயத்தில் ஏற்படும் அதிக செலவைச் சமாளிக்கமுடியவில்லை. அதனால்