பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O. 10 7

போதுமான உரம் போடுவது மருந்து அடிப்பது போன்றவற்றைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

விவசாயத் தொழிலில் நிலவுடமையாளர்கள் மட்டு மே உழைப்பது என்பது போதாது, பெரிய விவசாயிகள், நடுத் தர விவசாயிகள் சொந்தத்தில் ஏர்மாடுகள் வைத் திருந்தாலும் ஏர் ஒட்டுவதற்கு ஆட்களைக் கூலிக்கு அமர்த்த வேண்டியதிருக்கிறது. சிறு விவசாயிகள் சொந்த ஏர்மாடு வைத்திருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் எல்லா சிறு விவசாயிகளிடமும் சொந்த ஏர் மாடுகள் இருக்கின்றன என்று கூறமுடியாது. சாதாரணமாக இப் போதெல்லாம் ஏர் உழுதல் பெரும்பாலான இடங்களில் சராசரி ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு மேல் நடைபெறுவதில்லை. கூலிக்கு ஏர்பிடிப்பதானால் சீசன் நேரங்களில் ஏருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுவிடும். சாதாரண ஏழை நடுத்தர விவ சாயிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

விதைத்தல், நடுகை, களை எடுத்தல், மருந்து தெளித்தல் அறுவடை போன்ற வேவைகளுக்கு சிறு விவசாயிகள் கூட கட்டாயம் கூலி ஆட்கள் வைத்துத் தான் வேலை செய்ய வேண்டும். இந்த வேலைகள் எல்லாம் சாதாரணமாக ஒரு நாளுக்கு நான்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் நடை பெறுவதில்லை.

விலை வாசி உயர்வு, வாழ்க்கைக் கஷ்டங்கள், கடின உழைப்பு போன்ற காரணங்கனால் விவசாயத் தொழி லாளர்களுக்கும் கூட வேலையில் அக்கறை ஏற்படுவ

தில்லை. சோர்வுதான் அதிகம் ஏற்படுகிறது.

நெல் நடுகையில் நேர்த்தியாக இல்லாவிட்டால் அதனால் பயிர் நெருக்கமின்றி விளைச்சல் பாதிக்கிறது. களை யெடுப் பது நன்கு அமையாவிட்டால், பயிர் வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. அறுவடையில் அடியில் பிடித்து அறுக்கா விட்டால் நெல் சாகுபடியில் வைக்கோல் அதிகம் கிடைக் காது. இப்போதெல்லாம் வைக்கோல் பாதிக்குப்பாதி கூட கிடைப்பதில்லை .

தண்ணிர் பாய்ச்சுவதில் குறிப்பாக கால்வாய்ப் பாசனத்தி லும், ஏரிப்பாசனத்திலும் சிக்கனமும் கவனமும் இல்லாமல் தண்ணிர் வீணாகிறது.

இவ்வாறு நில உடமையாளர்களிடமும் சரி, விவசாயத் தொழிலாளர்களிடமும் சரி, போதுமான உற்சாகமும் உணர்வும் இல்லாததால், உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.