பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இதர கிராமப்புறப் பாட்டாளிகளும் அவர்களுடைய பிரச்சனைகளும்

விவசாயிகளுக்கு அடுத்தபடியாக கிராமப்புறங்களில் வாழும் பலவேறு பாட்டாளி மக்கள் இருக்கிறார்கள். கைத் தறி நெசவாளர்கள், கடற்கரையோர கிராமங்களில் வாழும் மீனவர்கள், பனை தென்னை மரத் தொழிலாளர் கள், ஐந்தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர் கள், வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள், கல் உடைக் கும் தொழிலாளர்கள், பாய் முடைதல் கயிறு திரித்தல் முதலிய பல்வேறு சில்லரைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள கிராமப்புறப்பாட்டாளி மக்கள் இருக்கிறார்கள். இவர் களுடைய தொழில் நிலைமை, வாழ்க்கை நிலைமை, அவர் களுடைய பிரச்னைகள் முதலியவற்றையும் ஆராய வேண் டியதிருக்கிறது.

1. கைத்தறி நெசவாளர்கள்!

விவசாயத்திற்கடுத்த படியாக நமது நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் ஈடுபட்டுள்ள தொழில் கைத்தறி நெசவுத் தொழிலாகும். பட்டுநூல், பருத்தி நூல் இா ன்டு ம் நமது நாட்டு நெசவு. உலகப் புகழ் பெற்ற மஸ்லின் துணி இந்தியாவில்தான் நெய்யப்பட்ட தாக நமது வரலாறு கூறுகிறது.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்தியா விற்கு வந்த ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவின் கைத்தறித் துணிகளைத்தான் அதிகமான அளவில் வாங்கிக் கொண்டு போய் அவர்களுடைய நாடுகளில் விற்று லாபம் சம்பாதித்தார்கள்.

இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களும் முதலில் இந்திய கைத்தறித் துணிகளை வாங்கிக் கொண்டு போனவர்களாகத்தான் தங்கள் வாணிபத்தைத் தொடங் இனார்கள்.