பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

பின்னர் பிரிட்டனில் எந்திரத் தொழில் வளர்ந்த போது திசை மாறியது. நவீன எந்திரத் தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தியில் வேகம் ஏற்பட்ட போதிலும் இந்தியக் கைத்தறி ஜவுளியின் நேர்த்தி மில்த் துணிக்கு இல்லாத தால் கைத்தறித் துணிக்கான மார்க்கட் மிேல்ாகவே இருந்தது. அதற்கான கிராக்கி குறையவில்லை.

கைத்தறித் துணிகளின் போட்டியைத் தடுத்து பிரிட்டிஷ் மில்துணிையை மார்க்கட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்று பிரிட்டிஷ் வர்த்தகர்களும் முதலாளி களும் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி னார்கள். சுதந்திர வர்த்தகம் என்று அவர்கள் கூறிய தெல்லாம் ஏமாற்று வித்தையாகும். நமது நாட்டின் கைத்தறித் துணி உற்பத்தியையும் விற்பனையையும் தடுப் பதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எல்லா விதமான முயற்சிகளையும் செய்தார்கள். முதலாவதாக இந்தியக் கைத்தறித் துணிகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி, சிங்க் வரி களை விதித்தார்கள். அதனால் இந்தியக் கைத்தறி துணி களின் விலை அதிகமாயிற்று. இருப்பினும் ஐரோப்பிய மார்க்கட்டில் அதற்குள்ள கிராக்கி குறையவில்லை. அதன் பின்னர் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைத்தறித் துணி உற். பத்திக்கு வேறு பல இடை யூறுகளைச் செய்தார்கள். பட்டு நாலுக்கும், பஞ்சு நூலுக்கும் உள் நாட்டு வரிகளை விதித்தார்கள். தறிக் கூடங்களுக்கு வரி விதித்தார்கள். கைத்தறி நெசவாள ர்களுக்குத் தண்டவரி

போட்டார்கள். ஆயினும் இந்தியக் கைத்தறித் துணி உற்பத்தியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை.

அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிரிட்டனில் அந்த நாட்டு மக்கள் இந்தியக் கைத்தறி துணிகள் வாங்குவதைத் தடை செய்தார்கள். அந்தத் தடையையும் மீறி பிரிட்டிஷ் மக்கள், இந்தியத் துணியின் நேர்த்தியின் காரணமாய் அத்ை வாங்கிப் பயன்படுத்தினார்கள். அதையும் தடுப்பதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியத் துணியை வாங்குபவர் களுக்கும், அதை அணிபவர்களுக்கும், அபராதங்கள் விதித் தார்கள். அதையும் மீறி பிரிட்டிஷ் மக்கள் இந்தியத்துணியை வாங்கினார்கள்.

மேலாடைகளாக இந்தியத் துணிகளை அணியத் தடை இருந்ததால் பல பிரிட்டிஷ் வாடிக்கையாளர்கள் இந்தியக் கைத்தறித் துணிகளை உள் ஆடைகளாகப்பயன்படுத்தினர். குறிப்பாக இந்தியப்பருத்தி, பட்டுத்துணியின் நேர்த்தியையும் மிருதுத் தன்மையையும் அதை உபயோகிப்ப்ோர் விரும் பினார்கள்.

-- இதன் பின்னரும் இந்தியக்கைத்தறி துணியின் உற்பத்தியை