பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 111

யும் விற்பனையையும் தடுக்க முடியாததால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மேலும் பல கொடுமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். இந்தியாவில் பருத்தி சாகுபடியையும் பட்டுநூல் உற்பத்தியையும் தடுப்பதற்கு இந்தியா விலிருந்து பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியாளர்கள் சில நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள்.

பருத்தி சாகுபடி செய்பவர்களுக்கு வரி விதித்தார்கள். பருத்தி சாகுபடி செய்யும் நிலத்திற்கு வரி விதித்தார்கள். பருத்தி சாகுபடி செய்யும் நிலத்தில் உழும் ஏர்க் கலப்பை களுக்கு வரிவிதித்தார்கள். உழவு மாடுகளுக்கும் அதன்கொம் புகளுக்கும் நுகத்தடிக்கும் கூட வரி விதித்தார்கள், பருத்தி யை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளுக்கு வரி விதித்தார் கள். இந்த வரி மிகவும் கொடுமையான வரியாகவும் இருந்தது. சில சமயங்களில் பார வண்டிகளில் உள்ள பருத்தியின் விலை மதிப்பில் சரிபாதி அளவுக்குக் கூட வரி விதிக்கப்பட்டது.

இத்தனை கொடுமைகளைத் தாங்கியும் கைத்தறித் துணி உற்பத்தி நிற்கவில்லை. கைத்தறி நெசவாளர்களின் பணி நிற்கவில்லை. அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றொரு கொடுமையைச் செய்தார்கள். மஸ்லின் போன்ற மிக நேர்த்தியான துணிகளை நெய்யக் கூடிய நெசவாளர் களின் கட்டை விரல்களை வெட்டினார்கள். இவ்வாறு பல கொடுமைகளைச் செய்து கைத்தறித் துணி உற்பத்தியைத் தடுக்க முடியா விட்டாலும் அதன் உற்பத்தி குறைந்தது. பிரிட்டனில் ஜவுளி ஆலைத்தொழில்கள் மேலும் அபிவிருத்தி அடைந்தன. அந்த ஜவுளி ஆலைகளுக்குத் தேவையான பருத்தியை இந்தியாவில் அதிகமான அளவில் உற்பத்தி செய்வதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்_து.ாண்டினார்கள். அதனால் இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பழைய இந்தியக்கைத்தறித்துணிகளுக்கு அவசிய மான மெல்லிய ரக உற்பத்திக்குத்தேவையான பருத்தி உற் பத்தி மறைந்து பிரிட்டிஷ் ஆலைகளுக்குத் தேவையான புதிய மோட்டா ரக பருத்தி உற்பத்தி அதிகரித்தது.

அதன் பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் பல பருத்தி அரவை ஆலைகளும் நூல் உற் பத்தி மில்களும் தோன்றி வளர்ந்தன. அத்துடன் துணி உற். பத்தி ஆலைகளும் இந்தியாவில் பல பகுதிகளிலும் வளர்ச்சி அடைந்தன.

இவ்வாறு பிரிட்டிஷ் துணி ஆலைத் தொழில்களில் மூலமும் இந்தியாவின் நவீன துணி உற்பத்தி ஆலைகளின் மூலமும் ஏற்பட்ட போட்டியினால் கைத்தறித் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டபோதிலும் இந்தியாவில் கைத்தறித் தொழில் அழியவில்லை. இந்திய நாட்டில் விவசாயத்திற்கு அடுத்த படியாக, அதிகப்படியாக மக்கள் ஈடுபட்டுள்ள