பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

தொழிலாகக் கைத்தறித் தொழில் தொடர்ந்து நீடித்து வரு கிறது. இருப்பினும் இந்த நூற்றாண்டில் கைத்தறி நெச வாளர்களும் கைத்தறித் தொழிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இந்தியதேசிய இயக்கத்தில் கதர்த்துணி உற்பத்தியையும் உபயே கத்தையும் ஊக்கப்படுத்தினார்கள். இந்திய ஜவுளித் தொழிலை பாதுகாக்கும் நோக்கத்துடன் அந்நிய துணி பகிஷ்காரம் போன்ற கிளர்ச்சிகளை நடத் தினார்கள். ஆயினும் வேகமான ஆலைத்தொழில் வளர்ச் சியின் முன் கைத்தறி நெசவுத் தொழில் குறைந்து கொண் டே வந்தது. 1947 ஆம் ஆண்டில் இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர் நமது ஆட்சியாளர்கள் மூலம் கைத்தறித் தொழிலுக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்று நெசவாளர் கள் எதிர்பார்த்தார்கள். ஆயினும் ஆலைத் தொழிலுக்கு இருந்த ஆதரவுச் சட்டங்கள் கைத்தறித் தொழிலுக்கு இல்லாமல் இருந்தது.

1950 ஆம் ஆண்டி ன் தொடக்கத்தில் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. லட்சக் கணக்கான நெசவாளர்கள் வேலை இன்றி நடுத்தெருவில் அலைந்தார்கள. வேலை இருந்தவர்களுக்கும் நாள் முழு வதும் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தாலும் ஒரு ரூபாய் கூலி கிடைப்பதும் கஷ்டமாக இருந்தது. தமிழ கத்தில் இருந்த நெசவாளர்கள் இன்னும் அதிகமான அளவில் கஷ்டங்களுக்கு ஆளானார்கள். நெசவாளர் களுக்குள் பட்டினி சாவும் ஏற்படத் தொடங்கியது.

இந்த நேரத்தில், 1952 ஆம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழி காட்டுதலின் கீழ் 500 க்கும் அதிகமான நெசவாளர்கள் பட்டினிப் பட்டாளமாக சென்னையை நோக்கிப் பாத யாத்திரையாக நடந்து வந்தார்கள்.

இவ்வாறு நடந்து வந்த நெசவாளர் பட்டினிப் பட்டாளப் போராட்டத்திற்கு, அவர்கள் நடந்து வந்த வழி நெடு கிலும் மக்கள் வரவேற்று ஆதரவு கொடுத்தார்கள். அவர் கள் மதுரை, இராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களைக் கடந்து வந்தார்கள்.

பல்வேறு பகுதி மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இநசவாளர் பாத யாத்திரைப் போராட்டத்திற்கு ஆதர்வு இகாடுத்தார்கள். இந்தப் போராட்டம் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் பட்டினிப் பட்டாளப் போர்ாட்டம் என்று அழைக்கப்பட்டது. அன்று வலுவாக இருந்த தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சம்மேளனம் இந்தப் போராட்டத் திற்குத் தலைமை தாங்கியது.