பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

களில் வேஷடி, புடவை, துண்டுகள் டவல்கள் முதலிய ரகங்கள் நெய்யப்படுகின்றன. இராஜபாளையம் சத்திரப் பட்டி பகுதியில் ஆஸ்பத்தித்துணிகள் நெய்யப்படுகின்றன. இவைகளுக் கெல்லாம் இந்தியா முழுவதிலும், அண்டை நிாடுகளிலும் நல்ல மார்க்கட் இருக்கின்றன. ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கைத்தறியின் பல்வேறு ரகங்களுக்கு விசைத்தறிகளும் வந்துள்ளன. கைத்தறியும் தொடருகிறது. கைத்த விசைத்தறித் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நகரப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் குடியிருக்கிறார் கள். இவர்கள் பெரும்பாலும் உதிரிப் பாட்டாளிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில் பாதுகாப்பு, வேலைப்பாதுகாப்பு கொடுப்பது என்பது வெறும் தொழில் மற்றும் தொழிலாளர் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு சமுதாயப் பிர்ச்சனையாகும். நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சனை என்பதும் இந்தியா முழுவதிலும் உள்ள பிரச்சனையாகும்.

நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வு கொடுப்பது என்பது தொடர்ச்சியாக உள்ள பிரச்சனையாகும். நெசவாளர்கள் அனைவரையும், கூட்டுறவு அமைப்புகளின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு நியாயமான விலையில் நூல் சாயம் முதலிய பொருள் கள் கிடைப்பதற்கும், உற்பத்திக் கருவிகள் கிடைப்பதற் கும், படிப்படியாக உற்பத்திக் கருவிகளில் அபிவிருத்தி கொண்டு வருவதற்கும் கைத்தறித் துணிகளை விற்பனை செய்வதற்கும், அதற்குரிய திட்டங்களை வகுத்து நிறை வேற்றுவதில் இன்று முதலாளித்துவ முறையில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மீண்டும் நெசவுத் தொழில் ஒரு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

நூல் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதர சாபப் பொருள்களின் விலைகளும் ஏறிக் கொண்டே போகிறது. மின்சாரக் கட்டணத்தின் உயர்வு, பஸ் , ரயில் கட்டணங்

களின் உயர்வு, சரக்குக் கட்டணங்களின் உயர்வு, லாரி கட்டணங்களின் உயர்வு முதலியவைகளும் கைத்தறித் துணியின் விலையும் மேற்குறிப்பிட்ட காரணங்களால்

உயருகிறது. துணி விலை உயர்வாலும், மக்களிடம் உள்ள வாங்கும் சக்தியின் குறைவாலும், கைத்தறித் துணியின் விற்பனை பாதிக்கப்பட்டு, துணித் தேக்கம் அதிகரித்து வருகிறது.

அத்துடன் நெசவாளர் கூட்டுறவு சொஸைட்டிகளில் அரசாங்கத்தின் நிர்வாகத் தொடர்பு காரணமாக ஏற் பட்டுள்ளலஞ்சம் ஊழல்மோசடிகள் அதிகரித்துக் கைத்தறித் தொழிலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.