பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 117

இதர கிராமப் புற மக்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் குறைந்த விலையில் பொது விநியோகத்தின் மூலம் கிடைக்க வும் கைத்தறி நெசவாளர்கள் தனியார் மூலமும் சரி, கூட்டுறவு சொஸைட்டிகள் மூலமும் சரி, உற்பத்தியாகும் துணியை அரசு முழுமையாகக் கொள் முதல் செய்து, விற்பனை செய்ய முறையான ஏற்பாடு செய்யவேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால், அங்கக் குறைவுகள் ஏற்பட்டால் வியாதிகள் வந்தால், வயது அதிக மானால் அவர்களுக்கு, முழுமையான சமூகப் பாதுகாப்பு கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும்.

உணவு, துணி, வேலை, வீட்டு வசதி, கல்வி இதர அவசிய மானவை கிடைக்கவும், அதற்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய ஒரு புதிய ஆட்சி அமைப்பு, நிர்வாக அமைப்பு ஏற். படவும், தொழில் துறையில் படிப்படியாக நவீன உற்பத்தி முறைகளைக் கொண்டு வரவும், கைத்தறித் தொழிலில் உள்ள உபரித்தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கிடைக்க வும், அதற்கான வளர்ச்சிப் பாதையை செயல்படுத்தக் கூடிய சோஷலிஸ் திசை வழியிலான மாற்று ஆட்சி அமைப்பு ஏற் படவும், கைத்தறி நெசவுத் தொழிலாளர்களை சங்கத்தில், வலுவான அமைப்பு நிலைகளில் ஒன்று திரட்டவும். அரசியல் ரீதியில் சமுதாய விழிப்புணர்வை உயர்த்தி அவர்கள் தங்களுக்கும் நாட்டிற்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறை வேற்றவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும் .

2 மீனவர்கள்

நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று பாரததேசம். தமிழகத்தில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் கடற்கரை இருக்கிறது.

மேற்கு வங்காளம், ஒரியா, ஆந்திரப்பிரதேசம், தமிழ் நாடு, கேரளம், பாண்டிச்சேரி, கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் முதலிய மாநிலங்கள் நீண்ட

கடற்கரைகளைக் கொண்டவை.

கடற்கரை தவிர பெரிய ஆறுகளும், கழிமுகங்களும். அணைக்கட்டுகள் ஏரி, குளம், கண்மாய்கள் போன்ற உள் நாட்டு நீர் நிலைகள் முதலியனவும் மீன்வளர்ச்சிக்கான இடங்களாக உள்ளன.

மீனவர்கள் பழமையான நீண்ட வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பெருங்குடி மக்களாவர். மீன்பிடிக்கும் தொழில் உலகின் மிகத் தொன்மையான தொழில்களில் ஒன்றாகும்.