பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

உப்பளத் தொழில் பெரும்பாலும் கடலோர கிராமங்களில் தான் அமைந்துள்ளது. நமது நாட்டில் ஆண்டு முழுதும் உள்ள சூரிய ஒளி, கடல் நீரிலிருந்து உப்பு எடுக்கும் உப்பளத் தொழிலுக்கு மிகவும் உகந்ததாகும்.

இந்த உப்பளத் தொழிலுக்கும் நமது நாட்டில் மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் உப்பு உற்பத்தி அதிக மாக உள்ளது.

உப்பளங்களில் உப்பு எடுத்த பின்னர், எஞ்சியுள்ள பொருள் களில் பல ரசாயன மூலப் பொருள்கள் உள்ளன. அவை களைப் பயன்படுத்தி பல ரசாயனத் தொழில்கள் வளர்ப் பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தப் புதிய தொழில்கள் எல்லாம் தொழில் துறையில் நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப முறைகள் வரும்போது ஏற்படும் உபரித் தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும்.

இந்த உப்பளங்களில் தமிழ் நாட்டில் குறிப்பாக

எண்ணுார், மரக்கானம், வே தாரண்யம், மாரியூர், துரத்துக்குடி முதலிய இடங்களில் உள்ள உப்பளங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செப் கிறார்கள். அவர்களுக்கு வேலை உத்தரவாதம், குறைந்த பட்சக்கூலி சமூகப்பாதுகாப்பு முதலிய வசதிகளைச் செய்வதும் அவசியமாகும். உப்பளத்தொழிலாளர்கள்

அமைப்பு ரீதியில் ஒன்றுபடவேண்டும்.

3. தென்னை பனைமரத்தொழிலாளர்கள்.

நில உற்பத்தியோடு இணைந்தது தென்னை, பனை மரங் களைக் கொண்ட தோப்புகள், தென்னை, பனைமரங்கள் இந்தியாவில், குறிப்பாக தென் ம நிலங்களில் அதிகம். இந்த மரங்கள் நமது நாட்டில் பல லட்சக்கணக்கில் இருக் கின்றன.

தென்னை மரத்தின் பலன், தேங்காய். அது மிகவும் உயர்ந்த எண்ணெய்வித்து. தேங்காய் எண்ணெய் சமையலுக்குப்பயன் படுகிறது. சில வகை உணவுப் பொருள்கள் தயாரிப்பதற்கு நெய்க்கு ஈடாக உள்ளது, தேங்காய் எண்ணெய்.

இந்த எண்ணெய் சோப்பு செய்வதற்குப் பயன்படும் மூலப் பொருள்களில் ஒன்று; தேங்காய் எண்ணெய், காயங்களை யும், புண்களையும் ஆற்றும் மருந்து சக்தி படைத்ததாகும். தேங்காய் எண்ணெய் எந்திரப் பாதுகாப்பிற்கும் உபயோக மானதாகும் .