பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 12 1

தேங்காயே நேரடியாக சமையலுக்குப் பயன்படுகிறது. தேங்காய் இல்லாத தமிழ்நாட்டுச் சமையல் இல்லை. தேங்காய்த் துவையலிலிருந்து தேங்காய்ச்சாதம் வரையிலும் காய்கறிகளின் சமையலிலும் தேங்காயின் பயன்பாடு அதிகம். ருசிக்குத் தேங்காய், அத்துடன் சத்துக்கும் தேங்காய்.

தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும். நார் மிகவும் பயனுள்ளது: கயிறுகள், கயிறு கள் மூலம் எண்ணற்ற பல வீட்டுப் பொருள்கள், பிரஷ்கள் முதலியன செய்வதற்கும் அது தேவை. தேங்காய் மட்டைய மூலப் பொருளாகக் கொண்டு கேரளத்திலும் தமிழகத்திலும் ஏராளமான கயிற்றுத் தொழிற் சாலைகளும் இருக்கின்றன.

தேங்காயின் ஒடு கொட்டாங்கச்சி அல்லது சிரட்டை என்று கூறப்படும்; அது உறுதியான பொருள்; பல வகைப் பயன்பாடு உள்ளது. அதை இன்னும் நாம் சரியாகப் பயன்படுத்தவில்லல. இப்போது நமது நாட்டில் அதை அகப்பைக்குப் பயன்படுத்துகிறோம். அதை டெலிபோன் ரிசீவர் போன்ற சாதனங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் பல் வேறு கப்பு கள் செய்வதற்கும் சிரட்டை (கொட்டாங்கச்சி) யைப்பயன்படுத்தல்ாம். தென்னையின் இளநீர் உடலின் வெப்ப நிலையை சமப்படுத்தவும், தாகத்தைத் தணிக்கவும் வெட்டை மேக நோய் முதலிய நோய்களைத் தீர்ப்பதற்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

தென்னை ஒலைகள் வீட்டுக் கூரைகளை மேய்வதற்கு, பந்தல், கொட்டகை முதலியவைகளுக்கு மிகவும் பயனுள்ள சாதனமாகும். இன்றைய இந்தியாவில் உள்ள வீடுகளில் பெரும் பகுதி வீடுகள் கூரை வீடுகள் அந்தக் கூரையில் பெரும்பகுதி தென்னை ஒலை, பனை ஒலைகளைக் கொண்டதாகும்.

தென்னையின் அடிமட்டைகள் எரிபொருளாக விறகாகப் பயன்படுகிறது.

தென்னம் பாளையிலிருந்து கள் இறக்கப்படுகிறது. கள் என்பது ஒரு வகை மது பானம். இந்திய மொழிகளில் தேனுக்கும் மது என்று பொருள் உண்டு. கள் தென்னை மரப்பாளையிலிருந்தும் பனைமரப் பாளையிலிருந்தும் எடுக்கப்படுகிறது. இரண்டிற்கும் கள் என்றே கூறப்படுகிறது. கள் என்பது சாதாரண ஏழை எளிய மக்களுடைய ஒரளவு மலிவான மதுபானமாக இருக்கிறது. கள்ளில் இதர