பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 127

தொழில் துறையில் மிகவும் முக்கியமான பிரிவாகும். கட்டிடத் தொழில் இன்று மிகவும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. கட்டிடத் தொழிலுக்கு ஆதாரமாான கல், மண், ஒடு, செங்கல், சுண்ணாம்பும், இப் போது சிமிண்டு உற்பத்தியும் இந்தத் தொழிலுடன் இணைந்ததாகும். சுண்ணாம்பு உற்பத்தி என்பது இன்னும் கிராமத் தொழிலாகவே இருந்து வருகிறது. ஆனால் நாடு விடுதலை பெற்ற பின்னர் சிமிண்ட் ஆலைகள் அதிகம் வந்து சிமிண்ட் உற்பத்தியும் பெருகி, கட்டிட வேலை களுக்கு அதிகமாகப் பயன்படுகிறது.

கட்டிடத் தொழிலாளர்கள் சமுதாயத்தின் மிக முக்கிய மான தொழிலாளர் பிரிவாகும். ஐரோப்பிய நாடுகளில் கட்டிடத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் மிகவும் வலுவான ஸ்தாபன அமைப்புகளைக் கொண்டிருக் கிறார்கள். நமது நாட்டில் கட்டிடத் தொழிலாளர்களின் அமைப்பு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.

கட்டிடத் தொழிலாளர்கள் கிராமப்புறத் தொழிலாளர் களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூற முடியாது.

கிராமப்புறப் பாட்டாளிகளுடன் சேர்ந்து இவர்கள் கவனிக் கப்பட வேண்டியவர்களாவார்கள்.

கட்டிடத் தொழில் வெறும் தொழில் மட்டுமல்ல, அது ஒரு பெரும் கலையாகும். நமது நாட்டின் கட்டிடக்கலை மிகச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது. அத்துடன் பாரத நாட்டுக் கட்டிடக் கலை, பல வேறு கட்டிடக் கலைகளும் இணைந்த ஒரு பெரிய நாகரிக வரலாற்றைக் கொண்ட தாகும் , ‘

தென்னாட்டுக் கோவில்கள், கோபுரங்கள், கல்லனைகள், ஏரி குளங்கள், நமது நாட்டின் கட்டிடக் கலையின் சிறப்பு கள். வடமாநில்ங்களில் டில்லி சுல்தான்களின் கட்டிடக் கலை, மொகலாயர்களின் கட்டிடக் கலை, கோட்டைகள், சமாதிகள், பள்ளிவாசல்கள், அதன் உச்சமாக தலைசிறந்த கலைச் சின்னமான தாஜ்மகால்; விஜயநகர மன்னர்கள் காலத்தில் தோன்றிய பல கோட்டைகள், அரண்மனைகள் கோவில் பிரகாரங்கள், புதியவகைக் கோபுரங்கள், மண்டபங் கள் சத்திரங்கள் முதலியவை; சீக்கியர்களின் குருத்துவாராக் கள், ஐரேப்பியர் வந்த பின் வந்துள்ள பெரிய பாலங்கள் மாதா கோவில்கள் புதியவகைக் கோட்டைகள், அரசி மாளிகைகள் கட்டிடங்கள் முதலியவைகள் எல்லாம் இந்தி; வரலாற்றுச் சின்னங்களாக நமது நாட்டு கட்டிடத் தாழி வாளர்களின் கை வண்ணங்களைச் சிறப்பித்து எண்ணற்ற கதைகளை-வீரத்தின், காதலின் கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றன.