பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி. .

தமது நாட்டின் பழைய கட்டிடத் தொழில் கல்லோடு இணைந்தது. கல் என்றால் கலை ,கல் என்றால் கலாச் சாரம் என்று பொருள். கல்லும் கதை சொல்லும் என்பது பழமொழி. கல்லுக்கு கதை சொல்லும் சக்தி பிறந்தது, சிற்பியாலும்கட்டிடத் தொழிலாளியாலும்தான் என்பதைக் காண்கிறோம்.

இன்றைய கட்டிடத் தொழில் நவீன எந்திரவ ளர்ச்சியை ஒட்டி புதிய பரிமாணங்களை, புதிய உயரங்களை

எட்டியிருக்கிறது.

ஆயினும் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, நமது நாட்டில்,வட்யரவில்லை. வேலைப் பாதுகாப்பு, ஊதிய

வசதிகள், சமூகப்பாதுகாப்பு இதர உரிமைகள் சரியாக இல்லை.

உதிரிப் பாட்டாளி மக்களின் ஒரு முக்கியமான

பிரிவு என்னும் முறையில் கட்டிடத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியில் திரட்டுவதில் நாம் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அவர் களுடைய கோரிக்கைப் பட்டியல் தயாரித்து. அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியமானதாகும்.

இப்போதைய முதலாளித்துவப் பாதையின் நெருக்கடியின் காரணமாக சமுதாய வளர்ச்சி தேக்க மடைந்திருக்கிறது. தடைப்பட்டு நிற்கிறது. அதனால் கட்டிடத் தொழில்கள், கட்டு மானப்பணிகள் தேக்கமடைந்துள்ளன. தடைப் பட்டு நிற்கின்றன. புதிய வேலைகள் அதிகம் இல்லை. அதனால் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந் துள்ளன.

ஒரு பக்கம் மக்களுடைய அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மக்களுடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்

கிறது.

நமது நாட்டில் மிகப் பெரும் பாலான மக்களுக்கு, முக்கால் வாசி மக்களுக்கு சரியான வீட்டு வசதி இல்லை. சென்னை போன்ற ப்ெரிய நகரங்களில் கூட மக்கள் தொகையில் சரி பாதி பேருக்கு மேல் குடிசைகளிலும் தெரு ஓரங்களிலும் தான் மக்கள் வாழ்கிறார்கள்.

த்தனை பேருக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒரு சிறிய வீடு காடுப்பதானாலும் இன்றைய கட்டிடத் தொழிலாளர் களுக்குப் பெரும் அளவில் வேலை கிடைக்கும்.

நாடு விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளைக் கடந்தும்