பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () 129

இன்னும் நாட்டு மக்களில் 60 சதவீதப் பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ஆவர்களுக்கு வேண்டிய பள்ளிக்கூடங்கள் இல்லை. இப் போது இருக்கும் பள்ளிக் கூடங்களும் பராமரிப்பு er rf) ப அதி இல்லாமல் இடிந்து கொண்டிருக்கின்றன. பல பள்ளிகள் வெறும் குடிசை, கொட்டகைகளாக் இருக் கின்றன. --

எல்லோருக்கும் கல்வி கிடைக்கப் போதுமான கல்வி நிலையங்கள் கட்டுவதானால், இன்றைய கட்டிடத் தொழிலாளர்களுக்கு இன்னும் பல மாதங்கள் வேலை கிடைக்கும்.

நமது நாட்டின் கடற்கரையோர மக்களுக்கு-தொழிலுக்கு அவசியமான, மீன்பிடித் துறைமுகங்கள், கட்டிடங்கள், வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிட்டால் நமது கட்டிடத் தொழிலாளர்கள் வேலை செய்து முடியாது.

இத்தனை வளர்ச்சி வாய்ப்புகள், முதலாளித்துவப் பாதையில் . நிச்சயம் ஏற்படாது. சோஷலிஸத்திசை வழியில்தான் அந்த வாய்ப்புகள் வளரும். இன்றைய

சோஷலிஸ் நாடுகளிலும் சோஷலிஸ் திசை வழியிலான நாடுகளிலும் வளர் முக நாடுகளிலும் கட்டிடத் தொழி லாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் எற்பட்டிருக்கின்றன.

வீடுகள், கல்வி நிலையங்கள், ஒய்வு இல்லங்கள், திரை அரங்குகள், விளையாட்டு அரங்குகள், தொழிற்சாலை கள், சாலைகள் பாலங்கள், முதலிய கட்டு மானத்திட்டங்கள் ஏராளமான அளவில் விரிவாகப் போடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

இந்த அரும்பணிகளைக் கட்டிடத் தொழிலாளர்கள் நிறை வேற்றுகிறார்கள். அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு களும், தொழில் வசதிகளும், சமூகப் பாதுகாப்பு வசதி களும் நிரம்ப செய்யப்பட்டிருக்கின்றன.

முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின் முன்னுதாரணங் கள், வளர்ச்சித் திட்டங்கள், நமது நாட்டுக் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஊக்க மூட்ட வேண்டும்.

கட்டிடத் தொழிலாளர்களுக்கான சங்கங்களை வளர்க்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளைத் தொகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான இயக்கங்களை நடத்த வேண்டும். அவர்களுடைய தொழிலுடன், வாழ்க்கை யுடன் இணைக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வும் நாட்டில் சமுதாய மாற்றத்திற்கான இயக்கங்