பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 0 கி ராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

களில் பங்கு கொள்ளவும் கட்டிடத் தொழிலாளர் களின் உணர்வு நிலையை உயர்த்த வேண்டும்.

சோஷலிஸ் திசை வழியிலான சமுதாயப் புரட்சிகர தேசிய இயக்கத்தில் கட்டிடத் தொழிலாளர்களும் சிறப் பாகப் பங்கு கொள்ளப் பாடுபட வேண்டும். கட்டிடத் தொழிலாளர்களும், தங்களுக்காகவும், நாட்டிற்காகவும், தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முன் வர வேண்டும்.

7 இதர கிராமத் தொழில்கள்:

பீடி, சுருட்டு, புகையிலை, தீப்பெட்டி, பட்டாஸ் உற்பத்தி முதலிய தொழில்கள் பெரும் பாலும் கிராமங்களில் பரவி யுள்ளன. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் குடிசைத்தொழில் அடிப்படையிலேயே வேலை செப் கிறார்கள் என்ற போதிலும் இவர்களுக்கெல்லாம் அவர் களுடைய வேலை முறையை ஒழுங்குபடுத்துவதற்கான சில தொழிலாளர் சட்டங்களும் தொழிற்சாலை சட்டங் களும் மற்றும் கடை நிறுவனச்சட்டங்களும் தனிசட்டங் களும் இப்பகுதியில் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் தொழில்கள் குறைந்த பட்சக் கூலிச் சட்டத்தின் கீழ் வருகின்றன.

இந்தப் பிரிவுத் தொழிலாளர்கள் பல இடங்களில் சங்கரீதியி லும் திரண்டுள்ளார்கள். இவர்கள் அரசியல் பயிற்சி பெற்று இதர கிராமப்புற தொழிலாளர்களை ஒன்று திரட்டு வதற்கு உதவ வேண்டும்.

இன்னும் நமது கிராமப்புறங்களில் பாய் முடைதல், கூடை முடைதல் போன்ற தொழில்களிலும் உதிரியாகப் பல இடங் களில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள். இதில் பாய் முடைதல் ஒரு முக்கிய தொழிலாகும்.

கோரையிலிருந்தும், பனை ஒலை, ஈச்சம் ஒலையிலிருந்தும் பாய்கள் தயாரிப்பது நமது நாட்டின் மிகவும் பழைய தொழில்களில் ஒன்றாகும். பனை ஒலைப் பாய்கள், ஈச்சம் பாய்கள் பேக்கிங் செய்வதற்கு முக்கியமாகப் பயன் படுகிறது.கோரைப் பாய்கள், ஏழைகளின் படுக்கை விரிப்பா கும். கோரைப் பாயில் படுப்பது நமது நாட்டின் வெப்ப நிலைக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும்.

பாய் நெசவுத் தொழில் திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம் மதுரை முதலிய மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளது. அவர்களுக்கு கோரை, நூல் ஊதியம், பாய் விற்பனை முதலியவற்றில் பல