பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 131

பிரச்சனைகள் உள்ளன. இதில் உற்பத்தியாளர்களுக்கும் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கும் மிகவும் குறைவான வருவாய் தான் கிடைக்கிறது. போக்குவரத்து செலவும், விற்பனையாளர்களின் லாபமும் பாய்களின் விலையை மேலே கொண்டு போகிறது. இதில் உற்பத்தி விற்பனையைக் கூட்டுறவு முறையில் கொண்டு உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சற்று கூடுதலான ஊதியம் கிடைக்க முயற்சிக்க வேண்டும்.

வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள்.

வெற்றிலை நமது நாட்டில் உள்ள ஒரு சிறந்த மூலிகை யாகும். உணவு செரிப்பதற்கு வெற்றிலை உதவுகிறது. வெற்றிலை , பாக்கு. சுண்ணாம்பு சேர்த்துப் போடுவது நமது நாட்டு மக்களின் முக்கிய பழக்கமும் பண்பாடுமாக இருக்கிறது.

வடக்கே, ‘பான்ஷாப் ,-தெற்கே வெற்றிலை பாக்குக் க ைட , என்பதும் பிரபலமானதாகும் வெற்றிலை போடுவது. உணவு செரிப்பதற்கு மட்டுமல்ல. பல்

லிற்கு உறுதியளிக்கிறது. வாய் நாற்றத்தைத் தடுக்கிறது. உதடுகளுக்கு அழகு கொடுக்கிறது.

இரண்டு வெற்றிலையில் சிறிது உப்பும் இரண்டு மூன்று மிளகையும் வைத்து மென்று தின்றால் கடுமையான அஜீரணத் தால் ஏற்படும் வயிற்று வலியும் நின்றுவிடும். இது போல் வெற்றிலையின் மூலிகைக் குணம் ஏராள உள்ளது.

வெற்றிலை சுவைப்பது நமது நாட்டில் பெரும் பாலான சாதாரண மக்களுடைய பழக்கத்தில் ஒன்று என்னும் முறை யில் வெற்றிலை உற்பத்தி நமது நாட்டில் ஒரு தனி அம்ச மாக உள்ளது.

நமது நாட்டில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் வெற்றி

லை உற்பத்தி செய்யப்படுகிறது. அது நிலத்தில் பயிரிடப்

படும் ஒரு பயிர் என்றாலும் அது ஒரு தனித்தன்மையான

வசாயமாகும்.

வெற்றிலை சாகுபடிப் பகுதி கொடிக்கால் என்று கூறப்படு கிறது. மிகவும் செழிப்பான தண்ண்ரீர் வசதியுள்ள நில்த்தில் தான் வெற்றிலை பயிரிடப்படுகிறது.

தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. ஆற்றங்கரைப் பகுதிகளில் அது அதிகம். காவிரிக்கரை வெற்றிலை சாகுபடிக்குப் பெயர் போன க.