பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்.

என்று பாரதி காவிரிக் கரை வெற்றிலையைச் சிறப்பித்துப்

பாடியுள்ளார்.

வெற்றிலை விவசாயத்திலும்,அந்த விவசாயத்தில் சம்பந்தப் பட்டுள்ள விவசாயப்பாட்டாளிகள் வாழ்விலும் பல பிரச்ச

னைகள் உள்ளன.

கொடிக்கால் விவசாயம் மிகவும் கடுமையான, நுட்பமான, கவனம் மிக்க விவசாயமாகும். வெற்றிலைக் கொடி அகத்திச் செடிகளின் மீது படர விடப்படுகிறது. கொடிக்கால் போடு வதற்கு உரம் மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது.விவ சாயத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் வெற்றிலை விவசாயத்திலும் உள்ளன.

ஆத்துடன் வெற்றிலைத் தோட்டத்திலிருந்து இலைகளைச் சேகரிப்பதும், அவற்றைக் கட்டுகள் கட்டி விற்பனைக்கு அனுப்புவதும் மிகவும் முக்கியமானதாகும்.

வெற்றிலைச் சாகுபடி மிகவும் விரிவான நிலப்பகுதிகளில் செய்வதல்ல. குறிப்பிட்ட நிலத்தில் ஆளுக்குக் கொஞ்சமாக ஐந்து செண்டு, பத்து செண்டு என்று பிரித்துக் கொண்டு அதில் ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செப் கிறார்கள். ஒரு கொடிக்காவில் பலர் பங்கு கொண்டு பணியாற்றுகிறார்கள். அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துத் தான் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள். இதில் குத்தகைப் பிரச்சனை உள்ளது.

பலவித நோய்களிலிருந்து வெற்றிலைக் கொடியைப்

பாதுகாப்பது ஒரு முக்கிய வேலையாகும். வெற்றிலை மக்கள் நேரடியாக மென்று தின்று உபயோகிக்கும் பொருளாகையால், வெற்றிலை நோய்களுக்கு கடுமை

யான விஷ மருந்துகளை உபயோகிக்க முடியாது. எனவே அதற்கான பூச்சி மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலை எடுப்பது ஒரு கடுமையான வேலை. மிகவும் பொறுமையுடன் ஒவ்வொரு வெற்றிலையாகக் கையினால் கிள்ளி எடுத்து அதைச் சேகரிக்க வேண்டும். கொடிக்கால் என்பது சதம்பல் தண்ணிர் அதிகம் உள்ள இடம். கொடிக்காலுக்குள் கொசுக்கள் மிக அதிகம். கொடிக் கால் கொசு கடிப்பதற்குப் பெயர் போனது. கொசுக் கடி யால் அந்த விவசாயிகளின் உடல்நிலை மிகவும் பாதிக்கப் படுகிறது.

கொடிக்கால் விவசாயம், அதன் விநியோகம், விற்பனை, வெற்றிலையின் பயன்பாடு முதலியவை பற்றித் தனி ஆய்வு