பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 133

நடத்தி இந்தத் தொழிலை அபிவிருத்தி செய்யவேண்டும். இதில் ஈடுபட்டுள்ள பாட்டாளிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

தஞ்சை,திருச்சி, சேலம், மதுரை, நெல்லை மற்றும் செங்கல் பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியில் கொடிக் கால் விவசாயம் அதிகம். அந்த இடங்களில் உள்ள கொடிக்கால் விவசாயிகளைத் தனியாக அமைப்பு ரீதியில் திரட்ட வேண்டும்.

கொடிக்கால் விவசாயிகள் தனி சங்கமாகத்திரண்டு தங் களுடைய கோரிக்கைகளை முன்வைத்து இயக்கத்தை வளர்க்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் பரமத்தி வேலு.ார்ப்பகுதியில் காவிரிக்கரையில்-கொடிக்கால் விவசாயி கள் சங்கம் உருவாகியுள்ளது. அது மாநில அளவில் வளர்க்கப்படுவதற்குக் கொடிக்கால் விவசாயிகள் தயாராக வேண்டும்.

நாட்டுச் செக்குத் தொழில் :

எள், கடலை, கடுகு, தேங்கா ப், வேப்பங்கொட்டை, ஆமணக்கு முதலியவை நமது நாட்டில் உள்ள மிக முக்கிய மான எண்ணெய் வித்துக்களாகும். நமது நாட்டின்

விவசாயத்தில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதில் எள், கடலை, கடுகு, தேங்காய் எண்ணெய்கள் சமையல் எண்ணெய்களாகும். அத்துடன் எள், தேங்காய் எண்ணெய்கள் தலையில் தேய்த்துக் கொள்ளவும் பயன் படுகின்றன. இந்தியாவின் வெப்ப நிலையில் தலையில்

எண்ணெய் தேய்த்துக் கொள்வது, மிகவும் அவசியமான தாகும்.

வேப்பங் கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த மருந்துப் பொருள்களாகும்.

நமது நாட்டில் எண்ணெய் பழைய கால முறையில் செக்கு கள் மூலம் செய்யப்பட்டு வந்தது. இதற்கெனத் திறமை வாய்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நாட்டுச் செக்குத் தொழில்பெரும்பாலும் மறைந்து கொண்டு வருகிறது. எந்திரச் செக்குகள் வந்து விட்டன.

ருப்பினும் நாட்டுச் செக்குகளும், எந்திரச் செக்குகளும் கிராமப்புறங்களில் உள்ளன.

அத்துடன் விவசாய உற்பத்திப் பொருள்களை ஆதார மாகக் கொண்ட அரிசி ஆலை, மாவுமில், சாகு (சவ்வரிசி)