பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

தொழிற்சாலைகளும் கிராமப்புறங்களில் வளர்ந்து வருகின்றன.

இந்தத் தொழில்கள் பற்றிய பிரச்னைகளிலும் இதில் ஈடு பட்டுள்ள .ெ தாழிலாளர் பற்றிய பிரச்னைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வையெல்லாம் மக்களுடைய உபயோகப் பண்டங்களுடன் ளு நேரடித் தொடர்பு கொண்ட தொழில்களாகும்.

இந்திய நாட்டின் முதலாளித்துவப் பாதையில் இந்திய நாட்டின் பொருளாதாரம், . உற்பத்தியும் விநியோக முறையும். ஏற்றுமதிக்கான திசை வழியில் தான் கொண்டு செல்லப்படுகிறது. எனவே ஏற்றுமதி செய்யப்படும் பொருள் களின் உற்பத்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தப்படு கிறது.

அதனால் மக்களுக்கு அவசியமான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள், குறிப் பாக சிறு தொழில்கள் பற்றி அரசின் கவனம் இல்லை மாறாக புறக்கணிப்பும் இருக்கிறது. இந்தத் தொழில்கள் இயற்கை நியதிகளுக்குப்பட்டு, தங் களால் இயன்ற அளவு சமாளித்து உயிர் வாழ்ந்து கொண்டி ருக்கின்றன.

இதில் உற்பத்தியாளர்கள்(உரிமையாளர்கள்) தொழிலாளர் கள் ஆகியோருடைய பிரச்னைகளையும் இணைத்து, ஸ்தாபன நீதியான இயக்கம் வளர வேண்டும்

சுமை துாக்கும் தொழிலாளர்கள்:

நாட்டில் பஸ், லாரி போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதையொட்டி கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் சுமை தூக்கும் தொழிலாளர் பிரிவும் தனியாக வளர்ந்துள்ளது. இந்தப் பிரிவுத்தொழிலாளர்கள் கடுமையான உடல் உழைப் பாளர்கள். இவர்கள் கிராமங்களில் சிறு பிரிவாக இருந்த போதிலும் போக்குவரத்துத் துறையில் முக்கிய அங்க LDGh/ 45 Gr ,

மாட்டு வண்டிப் போக்குவரத்து அதிகமாக இருந்த போது மூட்டைகளை ஏற்றுவது. இறக்குவது போன்ற வேலை களை வண்டிக்காரர்களே செய்து வந்தார்கள்.

இப்போது கிராமங்களுக்கும் பஸ் போக்குவரத்து, லாரி போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. தானிய மூட்டைகள், உர முட்டைகள் முதலியவைகளின் போக்குவரத்திற்கு v /f} கள் அதிகமாக வந்துள்ளன. இதில் மூட்டைகளை இறக்கு வது ஏற்றுவது முக்கியமான வேலை. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் ஒரு அவசியமான பிரிவாக உள்ளனர்.